உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நிறுத்தத்திற்கான காரணம் இது மட்டும்தான்! ரஷிய ராணுவம் விளக்கம்!!

0
199

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நிறுத்தத்திற்கான காரணம் இது மட்டும்தான்! ரஷிய ராணுவம் விளக்கம்!!

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடங்கியது ரஷ்யா. இன்று 12-வது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

போர் ஆரம்பித்த சமயத்தில், அங்குச் சிக்கியுள்ளவர்கள் அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதனிடையே, ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியதன் காரணமாக, உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள உள் மற்றும் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஷிய ராணுவத்தின் இந்த தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை உள்ளது. உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும். இதனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷியாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவரின் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரஷிய ராணுவம், “கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது”. இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணியில் இருந்து மனிதாபிமான அடிப்படிடையில் போரை நிறுத்தி அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் பாதை திறந்து விடப்படும் என ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது.

Previous articleஅடடா கீழ ஒன்னும் போடல! செக்ஸி போஸ் கொடுக்கும் பூனம் பஜ்வா!
Next articleமன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம்: -உக்ரைன் அதிபர்