திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நீட் தேர்வினை முழுவதுமாக ரத்து செய்வதற்கான போராட்டம் நடந்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பேசி இருப்பதாவது :-
விடாமல் சட்டத்தின் மூலமாக போராடினால் நீட் தேர்வில் விலக்கு வர முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்தை விடுவிக்க அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்படுத்தி அதற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இந்த அழைப்பினை ஏற்க மறுத்து அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மற்றபடி காங்கிரஸ் மதிமுக பாமக சிபிஎம் விசிக போன்ற கட்சிகள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். அதனோடு நீட் தேர்வினை தமிழகத்தில் இருந்து நீக்க தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கின.
தற்பொழுது வெளியாகி இருக்கக்கூடிய உச்ச நீதிமன்ற தீர்ப்பானது தமிழகத்திலிருந்து நீட் தேர்வினை முழுவதுமாக நீக்குவதற்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவும் தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்தும் பட்சத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை அதிகமாக இருப்பதாகவும் முதலமைச்சர். மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவ நுழைவு தேர்வான நீட்டானது விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களை அதிக அளவில் பாதிக்கிறது என்றும் பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான சீட்டுகளை வழங்க வேண்டும் என்றும் அதுதான் தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தது முதலே நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்டத்தை முன்மொழிந்து வருவதாகவும் அவற்றைக்கான நாட்களோடு குறிப்பிட்டு என்னென்ன நாட்களில் என்னென்ன வகையான போராட்டங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறித்து விவரித்து இருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்.
அடுத்த கட்ட போராட்டமாக நீட் தேர்வினை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டம் முன்முடிவுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதற்கு ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் ஒப்புதல் பெறுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்த விஷயம் குறித்து ஒன்றிய அரசு சுகாதாரத்துறை ஆயுஸ் உள்துறை உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களிடம் தமிழ்நாடு அரசினுடைய நீட் விலக்கிற்கான செயல் விளக்கங்களை அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த நீட் தேர்வானது யாரோ ஒருவர் தன்னுடைய சுயநலத்திற்காக ஒன்றிய அரசை தவறாக பயன்படுத்தி துவங்கியதாகவும் அதை முறையாக ஒன்றிய அரசு நடத்தாமல் இருப்பது குறித்து பல மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாகவும் கூறியதோடு, சட்டப்படியான போராட்டத்தை தொடர்ந்தால் கட்டாயமாக நீட் தேர்வு முழுமையாக நீக்கப்படும் என நம்பிக்கை அளித்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்.