சீட் பெல்ட் அணியவில்லையா இதுதான் அபராதம்! பெங்களூருவில் 1 லட்சம் வழக்குகள் பதிவு!
கர்நாடக தலைநகரான பெங்களூருவில் மக்கள் தொகைக்கு அதிகமாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி வருவதினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றது. அதன் காரணமாக அதிகளவு உயிர்சேதமும் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1 1/4 லட்சம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெங்களூருவில் கடந்த 2022 ஆம் ஆண்டு கார் உள்ளிட்ட வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று லட்சம் வழக்குகள் பதிவாகி இருந்தன 2022 ஆம் ஆண்டில் வழக்குகள் குறைந்ததற்கு போக்குவரத்து போலீசாரின் தீவிர கண்காணிப்பில் அபராதம் விதிப்பு ஆகையால் அனைவரும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி வருகின்றனர்.தற்போது புதிதாக வரும் கார்களில் சீட்பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது.
அதன் காரணமாக சீட் பெல்ட் அணிவதை பழக்கத்திற்கு கொண்டு வருகின்றனர்.பெங்களூருவின் வெளிவட்ட பகுதிகளான கனகபுரா சாலை, துமகூரு சாலை,மைசூரு சால, மாகடி சாலை ஆகிய இடங்களில் சோதனையின்போது அதிகளவில் வழக்குகள் பதிவாகி உள்ளது.