போதைப்பொருள் விற்றால் இனி இதுதான் தண்டனை! மதுரைகிளை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

போதைப்பொருள் விற்றால் இனி இதுதான் தண்டனை! மதுரைகிளை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

ஆசிரியர்கள் மாணவர்களை திருத்த பிரம்பெடுக்கும் காலம் போய் தற்பொழுது மாணவர்கள் ஆசிரியர்களிடம் பிரம்பை எடுத்து மிரட்டி வருகின்றனர். பெண் மாணவிகள் தங்களது சக தோழிகளுடன் மதுவுக்கு அடிமையாகி பள்ளியிலேயே மது அருந்துவது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகாத முறையில் நடப்பது வழக்கமாகி விட்டது. மாதா பிதா குரு என்ற சொல் லலாம் மறைந்து தற்போதைய மாணவர்கள் ஆசிரியர்களிடம் ரவுடிசத்தை காட்டி வருகின்றனர்.

இவற்றை கட்டுப்படுத்தும் வகையில் கல்வித் துறை அமைச்சர் ஒரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். இனி மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டால் அவர்களுக்கு ஒழுங்கீனம் மற்றவர்கள் என்று கூறி டிசி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல பள்ளியில் பயிலும் போதே மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாக்குவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது அனைத்தும் பள்ளியை சுற்றி உள்ள கடைகளில் போதைப் பொருள் விற்பதால் மாணவர்கள் பழக்கமாகி விடுகின்றனர்.

அவ்வாறு மகேஸ்வரி முரளி அந்தோணி ஆகிய மூவரும் பள்ளிகளுக்கு அருகில் போதை பொருள் விற்று வந்துள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பலர் அதனை வாங்கி உபயோகித்து அதற்கு அடிமையாகி உள்ளனர். இதனைக் கண்ட பலர் அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் மகேஸ்வரி முரளி அந்தோணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது பள்ளிகளுக்கு மத்தியில் போதை பொருள் விற்பது குறித்த இந்த வழக்கு மதுரை கிளை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் மூவருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

மகேஸ்வரி என்பவர் அவரது கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கழிவறை கட்ட ரூ ஒன்றரை லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல மற்ற இருவரான முரளி என்பவருக்கு ஒத்தக்கடையில் உள்ள பெண்கள் பயிலும் பள்ளிக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல அந்தோணி என்பவருக்கும் தூத்துக்குடியில் உள்ள அரசினர் மகளிர் பள்ளிக்கு கழிவறை கட்ட ரூ 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிபந்தனைகளுடன் அவர்களுக்கு தற்போது ஜாமின் வழங்கி உள்ளனர்.

Leave a Comment