டெல்லியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட இதுதான் காரணம்!! ஆய்வுகளின் முடிவுகள் என தெரியுமா!!

Photo of author

By Gayathri

டெல்லியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட இதுதான் காரணம்!! ஆய்வுகளின் முடிவுகள் என தெரியுமா!!

Gayathri

This is the reason for frequent earthquakes in Delhi!! Do you know the results of the studies!!

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வந்து மிகுந்த பயத்துடன் தஞ்சமடைந்திருந்த நிலையானது உருவாகியிருக்கிறது. ஏன் அடிக்கடி டெல்லியில் நில அதிர்வானது ஏற்படுகிறது இதற்கான காரணங்கள் என்ன என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன.

டெல்லி பேரிடர் மேலாண்மையின் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

அதிக நில அதிர்வுகளை உணரக்கூடிய இடமாக டெல்லி ஆனது வரையறுக்கப்பட்ட இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக டெல்லி நில அதிர்வு மண்டலம் 4 என்று வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் படி பார்க்கும் பொழுது டெல்லியில் 1970 இல் இருந்து அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

1970 இல் ஐந்து முறை நிலநடுக்கம் ஆனது உணரப்பட்டதாகவும் அந்த நிலநடுக்கத்தின் அளவானது 5-6 ரிக்டர் அளவு என்றும் சில சமயங்களில் இது 7-8 ரிக்டர் அளவுகளில் ஏற்பட கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் டெல்லியை பொருத்தவரையில் 85 சதவிகிதம் வீடுகளின் நிலையானது அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகாது என 1997 ஆம் ஆண்டு India vulnerability atlas என்பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 1997 களில் டெல்லியில் இருந்த வீடுகளின் சூழலும் தரமும் தற்பொழுது பல அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி இருப்பது எந்த அளவு நில அதிர்வுகளை தாங்கும் என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதிக அளவில் நில அதிர்வு ஏற்படும் தருணத்தில் டெல்லியில் மிகப்பெரிய அளவில் சேதாரங்கள் அமையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.