நல்ல பல் சொத்தையாக காரணம் இது தான்!! பல் சொத்தையை கண்ட்ரோல் பண்ண செய்ய வேண்டிய விஷயங்கள்!!

Photo of author

By Divya

நல்ல பல் சொத்தையாக காரணம் இது தான்!! பல் சொத்தையை கண்ட்ரோல் பண்ண செய்ய வேண்டிய விஷயங்கள்!!

Divya

நம் முகத்தில் உள்ள முக்கிய பகுதியான வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.வாய் சுகாதாரம் மோசமனாகும் போது சொத்தைப்பல்,பல் ஆடுதல்,ஈறு வீக்கம்,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

நமது பற்கள் கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற தாதுக்களால் ஆனவை.இந்த பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் அவை சொத்தையாகிவிடும்.

பல் சொத்தை:

இன்று குழந்தைகள்,பெரியவர்கள் என்று எல்லோரும் பல் சொத்தை பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.இதனால் இளம் வயதில் பற்களை இழக்க நேரிடுகிறது.

பல் சொத்தையால் அனுபவிக்க கூடிய விஷயங்கள்:

*சொத்தை பற்களால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

*கடுமையான பல் வலி மற்றும் பல் கூச்சத்தை அனுபவிக்க நேரிடும்.

பல் சொத்தை அறிகுறிகள்:

*பற்களில் காபி நிற கறைகள் படிதல்

*பல் வலி ஏற்படுதல்

*இனிப்பு உணவுகளை சாப்பிட்டால் பல் குடைச்சல் ஏற்படுதல்

*ஈறுகளில் வீக்கம் ஏற்படுதல்

*வாயில் கடுமையான துர்நாற்றம் வீசுதல்

பல் சொத்தைக்கான காரணங்கள்:

1)இனிப்பு பண்டங்களை உட்கொள்ளுதல்

2)பற்களை சுத்தம் செய்யத் தவறுதல்

3)பல் இடுக்குகளில் உணவுத் துகள்கள் சேர்தல்

4)வாயில் பாக்டீரியா படிதல்

5)குளிர்பானங்களை பருகுதல்

6)காபி,டீ அதிகம் பருகுதல்

பல் சொத்தையை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

முதலில் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.கேக்,சாக்லேட்,கூல் ட்ரிங்க்ஸ் போன்ற இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும்.

தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.பற்களுக்கு இடையே உணவுத் துகள்கள் படியாமல் சுத்தம் செய்ய வேண்டும்.

உணவு சாப்பிட்ட பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.கல் உப்பு நீர் கொண்டு தினமும் இருவேளை வாய் கொப்பளிக்க வேண்டும்.

புளூரைடு கலந்த டூத் பேஸ்டை பயன்படுத்தி பற்களை துலக்க வேண்டும்.வெற்றிலை பாக்கு போடும் பழக்கம்,புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிட வேண்டும்.

அதிக குளிர்ச்சி நிறைந்த உணவுகள் மற்றும் அதிக சூடான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பற்களில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் பல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.