உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கான காரணம் இதுதான்!

Photo of author

By Parthipan K

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கான காரணம் இதுதான்!

நேற்று முன்தினம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனும் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் பல இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. இன்று மூன்றாவது நாளாக ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது.

இந்த போருக்கு முக்கிய காரணமாக  கடல்வழி வர்த்தகமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் கருங்கடல் துறைமுகமும் அமைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஷியாவின் கடல் பரப்பு நீளம் வடதுருவம் வரை பரவி இருப்பதால் ஆண்டு முழுவதும் கடல் உரைந்தே காணப்படுகிறது. இதனால் இந்த கடல் பரப்புகள் ரஷியாவின் வணிக பயன்பாட்டுக்கு எந்த வகையிலும் பயன் அற்றே உள்ளது. கடல் வணிகத்துக்கும் தெற்கு பகுதிகளுக்கும் பண்டமாற்று தொடர்புகளுக்கும் உக்ரைனில் உள்ள செபஸ்டபுல் துறைமுகமே முழுமையாக கைகொடுத்து வருகிறது.

இந்த நிலையில், ரஷியா-உக்ரைன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி உக்ரைனின் செபஸ்டபுல் துறைமுகத்தை ரஷியா குத்தகைக்கு எடுத்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைனின் இறையாண்மையை எப்போதும் பாதுகாப்போம் என்று ரஷியா உறுதி அளித்து இருந்தது.

இந்த நிலையில்தான் உக்ரைன், ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்காக காய்களை நகர்த்தியது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் நாடு சேர்ந்து விட்டதால் நேட்டோ படைகள் உக்ரைன் துறைமுகம் பகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் ஏற்பட்டது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கடல்வழி வணிகத்துக்கு பெரும் துணையாக இருக்கும் செபஸ்டபுல் துறைமுகத்தை இழக்க நேரிடும் என்கிற கவலை ரஷியாவுக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று ரஷியா கருதியது. இதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது.