இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி தொடரை இழந்துள்ளது. இந்த தொடரின் தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை கனவு கனவாகவே போய்விட்டது. இந்த தோல்விக்கு பலவிதமான காரணங்கள் கூறி வந்த நிலையில் கங்குலி விளக்கமளித்துள்ளார்.
இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணமாக அவர் கூறுகையில், இந்திய அணி தோல்விக்கு ஒருவரை மட்டும் குறை கூற முடியாது. இந்திய அணி மூன்று இன்னிங்ஸில் மட்டுமே 200 ரன்களுக்கு மேல் அடித்தது. மற்ற இன்னிங்ஸில் 200 குறைவான ரன்களை எடுத்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் வெல்ல 200 ரன்கள் கூட போதாது.
டெஸ்ட் போட்டி என்றாலே 300 – 400 ரன்கள் குவிக்க வேண்டும். அவ்வாறு ரன் குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதனால் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறை கூற முடியாது. அனைவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக இந்திய அணி மூத்த முக்கிய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை அதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது.இந்த தொடரில் தோல்வியடைந்ததால் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்தும் வெளியேறியது இந்திய அணி.