வயது வித்தியாசமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள காரணம் இது தான்!! மனம் திறந்து பேசிய நஸ்ரியா!!
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நஸ்ரியா. அதன் பிறகு தனது நடிப்பு திறமையால் உச்ச நட்சத்திரமாக வளம் வந்தார் .
பின்பு தமிழ் ,தெலுங்கு ,மனையாலம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டு வருகின்றார்.
மேலும் இவர் தமிழ் மொழியில் நேரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவ்வாறு தனுஷ் அவர்களுடன் நய்யாண்டி என்னும் படத்தில் நடித்தார்.
இவருக்கு மிகவும் திருப்பு முனையாக அமைந்த படம் அட்லி இயக்கத்தில் ராஜா ராணி என்னும் படம் வெளிவந்து தமிழ் ரசிகர்களிடையே நஸ்ரியவிற்கு தனி இடத்தை பிடித்து தந்தது.
தமிழ் மொழியில் மட்டும்மலாமல் மலையாளத்தில் வெளியான வாயை மூடி பேசவும் போன்ற பல படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
அதன்பிறகு இவர் பட தயாரிப்பாளரான பகத் பாசலை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனா பிறகு அவர் அவளவாக படம் எதுவும் நடிக்கவில்லை நடிப்பில் இருந்து விலகியே இருந்தார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்த நஸ்ரியா தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கூறினார். அதில் அவர் நானும் அவரின் கணவரான பகத் பாசலும் திரைப்படம் ஒன்றில் இணைத்து நடித்தோம் என்றார்.
அதன்பிறகு அவரின் குணங்கள் என்னக்கு மிக்கவும் பிடித்தது என்றும் அதனால் எனது காதலை வெளிபடுத்தி விட்டதாகவும் கூறினார்.
மேலும் அவரிடம் எனது வாழ்க்கைக்கு ஏற்றவர் நீங்கள் தான் என்றும் நான் உங்களை வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தை போல் கண்கலங்காமல் பார்த்து கொள்வேன் என்றும் கூறியதாக கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.