இனி ஏழைகளும் வந்தே பாரத் ரயில் பயணிக்கலாம்!! இந்திய ரயில்வே வெயிட்ட ஹாப்பி நியூஸ்!!

0
52
Now poor people can also travel by Bharat train!! Indian Railway Wait Happy News!!
Now poor people can also travel by Bharat train!! Indian Railway Wait Happy News!!

இனி ஏழைகளும் வந்தே பாரத் ரயில் பயணிக்கலாம்!! இந்திய ரயில்வே வெயிட்ட ஹாப்பி நியூஸ்!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வே இயக்கப்படும் ஒரு குறுகிய தூர ரயில் சேவை. இந்த சேவை ஒரு நாள் நேரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள முக்கிய இந்திய நகரங்களை இணைக்கும் பகல் நேர ரயில் சேவையாகும். முதலில் இந்த ரயில் சேவை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சேவை நாட்டின் மிக முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ரயில் சேவைகள் 23 பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அதனையடுத்து இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி வரை செல்லும் சேவை ஜூலை 7 ஆம் தேதி தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. மேலும் இந்த ரயில் சேவை மற்ற மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது  கோரக்பூர் முதல் லக்னோ வரை,  ஜோத்பூர் முதல் அகமதாபாத் வரை மொத்தம் மூன்று சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயிலை சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்க இந்த சேவை தொடங்கப்பட்டது. அதனையடுத்து ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை இடையே இயக்கப்பட்டது.

இந்த நிலையில் பணக்காரர்கள் மட்டுமே பயணிக்க முடியும்  வந்தே பாரத் ரயில்களை தயாரித்து நாடு முழுவதும் இயக்கி வருகிறது. தற்போது  ஏழை எளிய மக்கள் பயன்பெற புதிய ரயில்களை உருவாக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும் இந்த ரயில் சேவை வந்தே பாரத் போன்று புதிய வசதிகளுடன் ஏசி மற்றும் படுக்கை வசதி இல்லாத சாதாரண விரைவு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் சேவைகளை மிகச் சிறந்த வகையில் புதிய ரயில்கள் அமைக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து ரயில் பேட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

author avatar
Jeevitha