முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார் அவருடைய 4வது ஆண்டு நினைவஞ்சலி கடந்த 7ம் தேதி திமுகவினர் மற்றும் அந்த கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோரால் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட பலரும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்கள்.
ஆனால் கருணாநிதியின் மூத்த மகனான கருணாநிதியின் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த வராதது ஏன்? என்பது தொடர்பாக திமுகவின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்ததாவது, ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கருணாநிதியின் நினைவு நாளில் வருடம் தோறும் இந்த நாளில் சென்னை வந்து அவருடைய நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதை அழகிரி வேடிக்கையாக வைத்திருந்தார்.
ஆனால் இந்த வருடம் அவரால் வர இயலவில்லை அவருடைய காலில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தான் இதற்கு காரணம் அவர் ஓய்விலிருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில், தன்னுடைய சகோதரரான அழகிரியை சந்தித்து உடல்நலம் விசாரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பப்பட்டுள்ளார் ஆனாலும் இதனை முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கின்ற ஒரு சிலர் விரும்பவில்லை. ஆகவே சகோதரரின் சந்திப்பை ஸ்டாலின் தள்ளிப் போட்டு விட்டார் என்றும், சொல்லப்படுகிறது.
ஆனால் முதல்வருக்கு நெருக்கமான ஒரு சிலர் என்பது யாராகயிருந்தாலும் ஸ்டாலின் மற்றும் அழகிரி உள்ளிட்டோர் ஒன்றிணைந்து விட்டால் நாம் அரசியல் செய்ய முடியாது என்று நினைப்பவர்களாகத் தான் இருக்க முடியும் என்றும், பலர் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனாலும் தன்னுடைய சார்பில் குடும்ப உறுப்பினர் ஒருவரை அனுப்பி வைத்து அழகிரியிடம் நலம் விசாரிக்க செய்தார் முதலமைச்சர் என்றும் சொல்லப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகளுக்காக மதுரைக்கு செல்லும்போது அழகிரியின் வீட்டுக்கு வந்து நலம் விசாரிக்க ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.