பாய் வீட்டு நெய் சோறு சுவையாக இருக்க காரணம் இது தான்!!

Photo of author

By Divya

பாய் வீட்டு நெய் சோறு சுவையாக இருக்க காரணம் இது தான்!!

பாய் வீட்டில் செய்யப்படும் பிரியாணி எவ்வளவு பேமஸோ அது போல் தான் நெய் சோறும்.இந்த உணவை பலரும் விரும்பி உண்கிறார்கள்.இந்த நெய் சோறை பாய் வீட்டு ஸ்டைலில் சுவையாக செய்யும் முறை கீழ கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சீரக சம்பா அரிசி – 1 கப்

*நெய் – 70 மில்லி

*பட்டை – 2 துண்டு

*இலவங்கம் – 4

*அன்னாசி மொக்கு – 3

*பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*பிரிஞ்சி இலை – 4

*இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

*பெரிய வெங்காயம் – 3(நறுக்கியது)

*தக்காளி – 1 (நறுக்கியது)

*புதினா இலை – 1 கைப்பிடி அளவு

*கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு

*முந்திரிபருப்பு – 1 கைப்பிடி அளவு

*தயிர் – 100 மில்லி

*பச்சை மிளகாய் – 8

*தேங்காய் பால் – 1 கப்

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 50 மில்லி நெய் சேர்த்து அவை சூடேறியதும் அதில் இரண்டு துண்டு பட்டை ,இலவங்கம் 4,அன்னாசி மொக்கு 3,பிரிஞ்சி இலை 4,ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து கிளற வேண்டும்.பிறகு நறுக்கி வைத்துள்ள 3 பெரிய வெங்காயத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

அடுத்து 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,நறுக்கிய தக்காளி ஒன்று,பச்சை மிளகாய் எட்டு, சேர்த்து வதக்கவும்.பின்னர் 100 மில்லி அளவு தயிர் எடுத்து அதில் ஊற்றவும்.

பின்னர் மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து 20 மில்லி நெய் சேர்த்து அவை சூடேறியதும் 1 கைப்பிடி அளவு முந்திரி பருப்பை சேர்த்து நன்கு வறுக்கவும்.இதை வதங்கி கொண்டிருக்கும் கலவையில் சேர்க்க வேண்டும்.அடுத்து பொடியாக நறுக்கிய புதினா 1 கைப்பிடி அளவு மற்றும் கொத்தமல்லி 1 கைப்பிடி அளவு சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் ஒரு கப் சீரக சம்பா அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

கலவை நன்கு கொதித்து வந்த பின்னர் கழுவிய அரிசியை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.அதில் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி விடவும்.பின்னர் ஒரு மூடி போட்டு மிதமான தீயில் 1/4 மணி நேரம் தம் போட வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்து நெய் தயாரான நெய் சோறை கிளறி விடவும்.