எங்களுக்குள் இந்த உறவு தான்.. நானே உறுதியளிக்கிறேன்!! வைரலாகும் விஷால் ட்வீட்!!

0
143

எங்களுக்குள் இந்த உறவு தான்.. நானே உறுதியளிக்கிறேன்!! வைரலாகும் விஷால் ட்வீட்!!

 

 

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷால்.இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.மேலும் இதனை தொடர்ந்து திமிரு, சண்டகோழி, தாமிரபரணி போன்ற ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும் நடிப்பை தாண்டி தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளராக பதவி வகித்து வருகின்றார். இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக விஷால் நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றது. இதனால் அவரது ரசிகர்கள் விஷாலின் வெற்றிக்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ‘கம்பேக்’ கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இவர் தற்பொழுது ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

 

 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவரை பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது.அது என்னவென்றால் 45 வயதாகும் விஷால், 27 வயதாகும் லட்சுமி மேனனை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற செய்தி தான் இணையத்தில் பரவி வருகின்றது.மேலும் ஒரு சிலர் இவர்களுக்கு திருமணமே முடிந்து விட்டது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

வதந்தி பரவ காரணம் ;

 

விஷால்,லட்சுமி மேனன் இருவரும் பாண்டிய நாடு,நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.மேலும் இப்படங்களில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்திருக்கும்.மேலும் நான் சிகப்பு மனிதன் படத்தில் இவர்களின் லிப்லாக் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி சில காலங்கள் சுற்றி வந்தது.ஆனால் விஷால் மற்றும் லட்சுமி மேனன் இது குறித்து பேசவில்லை.இதனை தொடர்ந்து விஷால் அவர்கள் நடிகர் சரத்குமார் அவர்களின் மகள் வரலட்சுமியை காதலிப்பதாக செய்தி பரவியது.மேலும் அதனை உறுதிபடுத்தும் விதமாக இருவரும் பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்றனர்.இந்நிலையில் சரத்குமாருக்கு விஷால் என்றால் ஆகாது என்பதினால் வரலட்சுமியிடம் விஷால் உடனான காதலை முறித்து கொள்ளும் படி கூறியுள்ளார்.இதன் பிறகு இருவரும் ஒன்றாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தனர்.

மேலும் பொது வெளிகளில் சந்திப்பதை தவிர்த்தனர் என்று சோசியல் மீடியாவில் தகவல் பரவியது.இதனை தொடர்ந்து அனுஷா என்ற பெண்ணுடன் விஷாலுக்கு நிச்சயம் ஆனது. அனால் சில காரணங்களால் அவர்களின் திருமணம் நின்றுவிட்டது. இதனை தொடர்ந்து விஷால் படங்களில் நடிப்பதிலும், நடிகர் சங்க பணிகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்நிலையில் மீண்டும் விஷால் மற்றும் லட்சுமி மேனன் திருமணம் குறித்த செய்தி இணையத்தில் பரவி வருகிறது.இது தொடர்பாக அதிரடி கருத்து ஒன்றை மிகவும் ஆதங்கத்துடன் விஷால் தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,

பொதுவாக என்னைப் பற்றி பரவி வரும் வதந்திகள் குறித்து பதில் அளிப்பதில்லை.அதற்கு பெரிதாக முக்கியத்துவம் தரமாட்டேன் காரணம் அது பயனற்றது என்று நான் உணர்கின்றேன்.ஆனால் தற்பொழுது நான் பேச காரணம் ஒரு பெண்ணுடைய வாழ்க்கை சம்மந்தபட்ட விஷயமாக இருக்கின்றது.கடந்த சில நாட்களாக லட்சுமி மேனன் உடனான எனது திருமணம் பற்றிய வதந்தி பரவி வருவதால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இது முற்றிலும் ஆதாரமற்ற ஒரு வதந்தி.நான் முதன் முதலாக ஒரு வதந்தி பற்றி கருத்துக்கூற காரணம் அதில் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் ஒரு நடிகை என்பதை தாண்டி லட்சுமி மேனன் ஒரு பெண் என்பதை மறந்து விட்டீர்கள்.மேலும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை கெடுக்க நினைக்கிறீர்கள்.

அத்துடன் அவரது இமேஜையும் சேர்த்து நாசம் செய்கிறீர்கள். மேலும் ஆண்டு, தேதி, மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று டிகோட் செய்வதற்கு இது ஒன்றும் பெருமுட முக்கோணம் அல்ல.நம்பிக்கை உணர்வு மேலோங்கும் நேரம் வரும் பொழுது எனது திருமணம் குறித்து அதிகார பூர்வமாக அறிவிப்பேன் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவின் மூலம் தனது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஷால்.

Previous articleபிரபல சமூக வலைதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய வீரர் விராட் கோலி!! அடேங்கப்பா இவ்வளவா??
Next articleஇந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்… மசோதாவை தாக்கல் செய்த பாஜக!!