இந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்… மசோதாவை தாக்கல் செய்த பாஜக!!

0
41

 

இந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்… மசோதாவை தாக்கல் செய்த பாஜக..

 

இந்திய நாட்டிற்கு பாரத் என்று பெயர் மாற்றம் செய்யக்கூடிய மசோதாவை ஆளும் மத்திய அரசு தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.

 

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எதிர்கட்சிகளில் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. எதிர்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இரண்டாவது நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 26 தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கட்சியை வீழ்த்துவது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டது. மேலும் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா ஒன்று அதாவது இந்தியன் நேஷ்னல் டெவலப்மென்டல் இன்குலூசிவ் அல்லியன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்ததற்கு பாஜக கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

 

தற்பொழுது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் ஆளும் பாஜக அரசு பல புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தி தாக்கல் செய்து வருகின்றது. அந்த வகையில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றும் மசோதாவையும் பாஜக இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்துள்ளது.

 

அதன்படி இந்தியா என்று பயன்படுத்தும் இடங்களில் பாரத் என்று மாற்ற பாஜக முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றிய ஒன்றிய பாஜக அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரிக்சா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா என்ற பெயராக மாற்றுவதற்கான மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.