எம்ஜிஆர் பிறந்தநாள் இதுதான் சரியான டைம்!! அதிமுக பாஜக மெகா கூட்டணி.. பிரதமர் பதிவிட்ட அதிரடி வீடியோ!!

ADMK BJP: எம்ஜிஆர் பிறந்த நாள் முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு 14 மாதங்கள் இருக்கும் நிலையில் மீண்டும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை இதனை கருத்தில் கொண்டு அதிமுகவுடன் கட்டாயம் இணைந்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளனர்.

இவ்வாறு இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமியும் 2026 யில் மெகா கூட்டணி அமையும் என்று தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் பார்க்கையில் மீண்டும் கூட்டணிக்கான வியூகம் இருப்பதாக தெரிய வருகிறது. மேற்கொண்டு கூட்டணி பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்தது அண்ணாமலை தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பற்றி அவதூறாக பேசியது தான் இதற்கு முக்கிய காரணம்.

வீடியோ லிங்க்:

https://x.com/narendramodi/status/1880124709142163779

இதற்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக வெளிநாட்டில் அரசியல் சார்ந்த படிப்பை முடித்துவிட்டு வந்த அண்ணாமலை அதிமுக குறித்து எதிர்மறையான எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கூட அதிமுகவிற்கு ஆதரவளித்து அண்ணாமலை பேசினார். அண்ணாமலை நகர்த்தும் ஒவ்வொரு அடியும் அதிமுகவின் கூட்டணியில் இணைய முயல்வதையே காட்டுகிறது.

இந்த சமயத்தில்தான் பிரதமர் மோடியும் இதற்கு பச்சைக் கொடி காட்டும் விதமாக எம்ஜிஆர் பிறந்த நாளான இன்று வாழ்த்து தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார். இவ்வாறு வாழ்த்து தெரிவித்ததன் பெயரில் கட்டாயம் இவர்களின் கூட்டணி உறுதி தான் என அரசியல் வட்டாரம் கூறி வருகின்றனர். இதே போல தான் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளன்று அண்ணாமலை அவர் குறித்த பதிவு ஒன்றையும் போட்டது குறிப்பிடத்தக்கது.