அமெரிக்காவில் எங்களுக்கு நடந்தது இதுதான்!! கண்ணீர் மல்க விவரிக்கும் இளைஞர்!!

0
3
This is what happened to us in America!! A young man with tears in his eyes!!
This is what happened to us in America!! A young man with tears in his eyes!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடுகடத்தும் முயற்சியில் இரண்டாவது விமானத்தையும் அமிர்தசரத்தில் இறக்கி விட்டனர். இதிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்களில் ஒரு இளைஞர் அமெரிக்க முகாம்களில் தனக்கு நிகழ்ந்தது குறித்து விவரித்திருக்கிறார்.

இதுகுறித்து சேனலுக்கு பேட்டி அளித்த ஜதீந்தர் சிங் தெரிவித்திருப்பதாவது :-

2 வாரங்கள் எங்களை முகாம்களில் தங்க வைத்தனர் என்றும் அங்கு தன்னுடைய டர்பனை கலட்ட சொல்லி வற்புறுத்தியதாகவும் அதை கழட்டிய பின் குப்பையில் தூக்கி எறிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இரண்டு வாரங்கள் அந்த முகாம்களில் தங்கி இருந்த பொழுது சரியான உணவு கூட கொடுக்காமல் சித்திரவதைப்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதாவது உருளை சீவல்கள் மற்றும் ஃபுரூட்டி ஜூஸ் மட்டுமே உணவாக கொடுக்கப்பட்டதாகவும் இரண்டு வாரங்களில் ஏர் கூலர்களைக் கூட குறைத்து விட்டு ரூம் ஹீட்டர்களை அதிகமாக பயன்படுத்தியதால் தங்களுடைய சருமங்கள் வறண்டு விட்டதாகவும் அந்த இளைஞர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தான் அமெரிக்கா சென்றது குறித்து அந்த இளைஞர் தெரிவித்திருப்பதாவது :-

தன்னுடைய குடும்ப சூழல் காரணமாக அமெரிக்காவிற்கு சென்ற தீர வேண்டும் எனவும் இதற்காக தங்களுடைய 1.3 ஏக்கர் நிலத்தினை விற்று 22 லட்சம் ரூபாய் தயார் செய்ததாகவும் மீதமுள்ள பணத்திற்கு தன்னுடைய சகோதரர்களிடம் நகைகளை பெற்று மொத்தமாக 50 லட்சம் ரூபாய் ஏஜென்ட் ஒருவருக்கு கொடுத்து பனாமா காடுகளின் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த பயணம் எளிமையாக இருக்கும் என நினைத்ததாகவும் ஆனால் தன்னை அழைத்துச் சென்ற ஏஜென்ட் பாதியிலேயே விட்டு சென்றதால் தான் தனியாகத்தான் அந்த காட்டை கடக்க வேண்டி இருந்தது என்றும் கடக்கும் பொழுது முறைகேடாக அமெரிக்காவில் குடியேற நினைத்தவர்களின் உடல்கள் பலவற்றை கண்டதாகவும் அதை தாண்டி செல்லும்பொழுது எல்லை காவலர்களிடம் தான் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Previous articleபாலுமகேந்திராவின் நினைவு நாளில் இளையராஜா சொன்ன உண்மை!! இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே!!
Next article10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய திட்டம்!!