தினமும் தர்பூசணி விதைகளை சாப்பிட்டால் இது தான் நடக்கும்!! தெரியாத சில தகவல்கள் இதோ!!
உடலுக்குத் தேவையான அளவு நீர்சத்துக்களை அள்ளித் தரக்கூடிய தர்பூசணிப் பழத்தில் உள்ள விதைகளை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கோடை காலம் வந்துவிட்டால் நம்முடைய நினைவுக்கு வருவது குளிர்ச்சியான உணவுகள் தான். அதிலும் நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடிய பழங்களில் முதலாவதாக நினைவுக்கு வருவது தர்பூசணிப் பழம் தான். தர்பூசணி பழத்தில் நம்முடைய உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து உள்ளது.
வெயில் காலங்களில் இளநீர், மோர் போன்ற பானங்களை விட தர்பூசணிப் பழத்தின் பயன்பாடு சற்று அதிகமாக இருக்கும். தர்பூசணிப் பழத்தை சாப்பிடுவதால் நம் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். மேலும் உடல் சூடு குறையும். அதே போல அதில் உள்ள விதைகளை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் சில நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
* தர்பூசணிப் பழத்தின் விதைகளை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.
* தினமும் ஒரு கைப்பிடி அளவு தர்பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் நம்முடைய சருமத்தில் உள்ள வறட்சியை போக்கும்.
* நாம் தினமும் தர்பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் சருமத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
* தினமும் தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் நாம் இளமையோடு இருக்க உதவி செய்யும்.
* இதய நோய் உள்ளவர்கள் தர்பூசணி விதைகளை சாப்பிடலாம். தர்பூசணி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
* தர்பூசணி விதைகள் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடியது.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் அவர்களுடைய இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
* இந்த தர்பூசணி விதைகளை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
* தினமும் ஒரு கைப்பிடி அளவு தர்பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும் வலிமை பெறும்.
* தினமும் ஒரு கைப்பிடி அளவு தர்பூசணி விதைகள் சாப்பிட்டு வந்தால் நம்முடைய மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.