Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

0
10213

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

அம்மை நோய்:

அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

பாடல்:

இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

ஆழமான கிணறு:

ஆழமான கிணற்றை கனவில் கண்டால் உங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்கள் எப்போதும் உறுதியானவையாய் இருக்கும் என்று பொருள்.

இசை நிகழ்ச்சி:

இசை நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் ரசிப்பது போல் கனவு வந்தால் பெரிய மனிதர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கப்போகின்றது என்று பொருள்.

காலதாமதம்:

ஒரு இடத்திற்குக் காலதாமதமாக செல்வது போல் கனவு கண்டால் மற்றவர்கள் உங்களை மதிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்ற மனக்குறை உங்களுக்கு இருக்கிறது என்பதைக் குறிக்கும்.

குரல்:

ஒரு குரலை கேட்பது போல் கனவு கண்டால் ஒரு முக்கியமான பிரச்சனையை தீர்க்க நீங்கள் யாருடைய யோசனையும் கேட்காமல், நீங்களாகவே சிந்தித்து அதனை தீர்க்க வழி தேடுங்கள். பிரச்சனை சுமூகமாகும் என்று பொருள்.

Previous article‘மாட்னா காலி… அதுவரைக்கும் ஜாலி’… சந்தானம் நடிக்கும் ‘குலுகுலு’ துள்ளலான முதல் சிங்கிள்
Next articleகடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!