தடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

Photo of author

By Divya

தடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

Divya

தடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

பணத்தை சேமித்து வைப்பது மிகவும் முக்கியம் ஆகும். நம் வாழ்க்கையை நகர்த்த முக்கியமான ஒன்றாக இருக்கும் இந்த பணத்தின் வரவு தடையின்றி அதிகரிக்க வீட்டில் நாம் சில ஆன்மீக வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

நம் அனைவரின் வீட்டிலும் பீரோ இருக்கும். இந்த பீரோவில் தான் அனைவரும் பணம், நகை வைத்து சேமித்து வருகின்றோம். இவ்வாறு இருக்கையில் பீரோவை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். பீரோவில் பணம், நகை வைக்கும் இடத்தில் மகாலட்சுமி தாயாரின் படத்தை வைக்க வேண்டும்.

பணம், நகையோடு 1 துண்டு விரலி மஞ்சள், குலதெய்வ கோயில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றை பொட்டணம் கட்டி வைக்க வேண்டும்.

அடுத்து பண வரவை அதிகரிக்க செய்யும் வாசனை நிறைந்த பொருட்களான ஏலக்காய், பச்சை கற்பூரம், துளசி, கிராம்பு, பெருஞ்சீரகம், வெற்றிலை ஆகியவற்றை வைத்துக் கொள்ளவும். துளசி மற்றும் வெற்றிலை வாடினால் அதை மாற்றி வைக்கவும். மற்ற பொருட்களை மாதம் ஒருமுறை மாறினால் போதும்.

மேலும் வாசனை நிறைந்த மல்லிகை பூ, சாமந்தி பூ, பன்னீர் ரோஜா போன்றவற்றை வைக்கலாம். இவ்வாறு செய்வதினால் பணம் ஈர்க்கப்பட்டு அதன் வரவு அதிகரிக்கும்.