சாதியை வைத்து இதனால்தான் படம் எடுத்தேன் – கமல்ஹாசன் அளித்த விளக்கம்!!

0
294
#image_title

சாதியை வைத்து இதனால்தான் படம் எடுத்தேன் – கமல்ஹாசன் அளித்த விளக்கம்!!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தான் எதற்கு சாதியை மையமாக வைத்து படத்தின் பெயரை வைத்தேன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

தேவர் மகன், நாயகன் உள்ளிட்ட கமல்ஹாசனின் படங்கள் சாதி பற்றிய சர்ச்சைக்கு உள்ளானது. வெளிவரவுள்ள தஃக்லைப் படத்திலும் கமல்ஹாசனின் கதாபாத்திரத்தில் சாதி பெயர் இருந்ததால் சர்ச்சையானது.

கமல்ஹாசன் தன்னை சாதிக்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டாலும், அவரது படங்களால் சாதி தொடர்பான விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறார். இப்போது பிரபல இயக்குநராக இயக்குனராக இருக்கும் மாரி செல்வராஜ்கூட கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தை கண்டித்து பல வருடங்களுக்கு முன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

ஆனால் ஏன் அம்மாதிரி படங்களை எடுத்தேன் என்பது பற்றி கமல்ஹாசன் அடிக்கடி விளக்கம் கொடுத்தாலும், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கவில்லை. தற்போதும் மீண்டும் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார் அவர்.

சிதம்பரம் தொகுதியின் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று பேசினார். தான் எப்போதும் சாதிக்கு எதிரானவன் என்றும், சாதியம்தான் என் எதிரி என்றும் கூறினார் கமல்ஹாசன்.

“அப்போது ஏன் சினிமாவுக்கு சாதி பெயர் வைக்கிறீர்கள்? என்று கேட்பீர்கள். குடியின் கொடுமையை சொல்வதற்கு, குடிகாரனை மையப்படுத்திதான் படம் எடுக்க வேண்டும். அதேபோல சாதிவெறியனை மையப்படுத்திதான் சாதியின் கொடுமையை சொல்ல வேண்டும் என்பதற்காகதான் அப்படி சினிமா எடுக்கிறேன்” என்றார் கமல்ஹாசன்.

Previous articleபிரச்சாரத்தின் முதல் நாளிலேயே பெண் வேட்பாளர் சுட்டுக் கொலை! அதிர்ந்து போன மெக்சிகோ சிட்டி!
Next articleநடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!