அஞ்சறை பெட்டியில் உள்ள இந்த பொருள்.. இத்தனை நோய்களுக்கு மெடிசனாக பயன்படுதா!!

Photo of author

By Divya

தென்னிந்திய உணவுகளில் மசாலா பொருட்களின் பயன்பாடு இன்றியமையாதவையாக உள்ளது.மசாலா பொருட்கள் உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

சீரகம்,சோம்பு,மிளகு,பட்டை என்று அனைத்துவித மசாலாக்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடலில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இந்த மசாலா பொருட்கள் திகழ்கிறது.

குறிப்பாக பருப்பு,கூட்டு போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் பெருங்காயத் தூள் வயிறு சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய உதவுகிறது.வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிற்று வலி,செரிமானப் பிரச்சனை போன்ற பலவித பாதிப்புகளுக்கு பெருங்காயத் தூள் மருந்தாக பயன்படுகிறது.

பெருங்காயத் தூள் சளி,மூச்சுக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது.காலி பெருங்காய டப்பாவையில் இருந்து வரும் வாசனையை முகர்ந்து பார்த்தாலே சுவாசப் பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.

உணவில் பெருங்காயத்தை சேர்த்துக் கொண்டால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.பெருங்காயத்தில் இருக்கின்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இரத்த நாளங்களின் அழுத்தத்தை குறைக்க பெருங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.குடலில் தேங்கிய கெட்ட கழிவுகள் அனைத்தும் வெளியேறி குடல் ஆரோக்கியம் மேம்பட பெருங்காயத்தை வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

ஞாபக சக்தி அதிகரிக்க மூளையின் செயல்பாடு மேம்பட பெருங்காயத்தை பொடித்து காய்ச்சிய பசும் பாலில் கலந்து குடிக்கலாம்.உடலில் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட பெருங்காய டீ செய்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.