தமிழக நியாய விலை கடைகளில் மீண்டும் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு வெளி கடைகளில் துவரம் பருப்பு விலை அதிகரிக்க துணை போகிறது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில், சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் வந்து விடும் என்ற பதில் தான் கிடைக்கிறதே தவிர, துவரம்பரும்பு வினியோகிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய விவகாரங்களில் காட்டப்படும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை எனவும் கூறியிருந்தார் .
இதற்கு தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். அதில் அவர் தமிழ்நாட்டில் தேவையான அளவு துவரம் பருப்பு நியாய விலை கடைகளுக்கு அனுப்படுகிறது. அதில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை என பதிலளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தமிழக சிறப்பு பொது விநியோக திட்டத்தின் வாயிலாக துவரம் பருப்பு கிலோ ரூ.30 கும் பாமாயில் ரூ.25 கும் வழங்கப்பட்டு வருகிறது அதில் துவரம் பருப்புக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்று கூறியுள்ளார்.
நவம்பர் மாதம் அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,83,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்துள்ளோம். இதில் 92 % நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்பட்டது. இன்னும் 64,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. ஆதலால் துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை எதிர்காலத்திலும் தட்டுப்பாடு இல்லாத வகையில் சீரான முறையில் விநியோகம் நடைபெற்று வருகிறது என்று அறிக்கையில் கூறியுள்ளார்.