இந்த இலை மூன்று போதும்! உங்கள் சர்க்கரை வியாதியை சரிப்படுத்தும்!

Photo of author

By Amutha

இந்த இலை மூன்று போதும்! உங்கள் சர்க்கரை வியாதியை சரிப்படுத்தும்!

எளிதில் கிடைக்கக்கூடிய வெற்றிலையை பயன்படுத்தி அதிகமாக பரவி வரக்கூடிய சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் ஒரு எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். இது யாருக்கும் எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. எல்லாரும் இதை பயன்படுத்தி பலன் பெறலாம்.

அந்த காலத்தில் நமது முன்னோர்கள் சாப்பிட்ட உடன் வெற்றிலை போடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இதன் மூலம் ஜீரண சக்தி அதிகரிக்கும். பொதுவாக நாம் உணவு சாப்பிட்ட உடன் அரை மணி நேரத்தில் அல்லது ஒரு மணி நேரத்தில் செரிக்க வேண்டும்.

அவ்வாறு செரிக்கவில்லை எனில் நமது உடலில் கழிவு பொருட்கள் தேங்க ஆரம்பிக்கும். இதனால் நமது ரத்தம் சுத்த தன்மையை இழந்து விடும்.

அடுத்து நமது கணையமானது இன்சுலினை சுரப்பதில் பின் தங்கிவிடும். பொதுவாகவே நமது உணவு செரித்து விட்டாலே அல்சர், நெஞ்சு எரிச்சல், வயிற்று உப்புசம், போன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாம்.

இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக இந்த வெற்றிலை முறை அமையும். இதற்கு தேவையானது மூன்று வெற்றிலை. காம்பை நீக்கிவிட்டு கிள்ளி போடவும்.

அடுத்து ஒரு மூன்று இணுக்கு வேப்பிலைக் கொத்தை எடுத்துக் கொள்ளவும். பூச்சி இல்லாத கொழுந்து வெப்பிலையை கழுவி பயன்படுத்தவும். இதை உருவி வெற்றிலையுடன் சேர்க்கவும்.

பிறகு இதில் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க விடவும். ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை நன்கு கொதிக்க விடவும். நன்கு நிறம் மாறி வரும். பிறகு ஆறவிட்டு ஒரு டம்ளரில் வடிகட்டவும்.

இதை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக காலை மற்றும் மதியம் என இரண்டு வேளை பயன்படுத்தலாம்.

இதைத்தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வர சர்க்கரை நோய் கட்டாயம் கட்டுக்குள் வரும். மேலும் வயிறு சம்பந்தப்பட்ட நிறைய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வினை தரும்.