மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உயிர் வாழ தண்ணீர் மிக மிக முக்கியான ஒன்று.உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்ள அவசியம் தண்ணீர் அருந்த வேண்டும்.உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சிறுநீரகம் வழியாக வெளியேறும் வேலையை தண்ணீர் செய்கிறது.உடல் இயக்கம்,செரிமானம் ஆகியவற்றிற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்று.
சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் வராமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் இன்று பலர் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுகின்றனர்.இதனால் உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் உடல் வறட்சி ஏற்படுகிறது.முக்கியமாக சிறுநீரகத் தொற்று,சிறுநீரக கல்,சிறுநீர் கடுப்பு போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.உடலில் நீர் பற்றாக் குறையால் சிறுநீர் கழிக்கும் போது வலி,எரிச்சல்,நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல,சிறுநீரில் துர்நாற்றம் வீசுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படமால் இருக்க தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் தண்ணீரை அளவிற்கு அதிகமாக குடித்தால் அது உடலில் பக்கவிளைவுகளை உண்டாக்கவிடும்.
நீங்கள் தேவையில்லாத நேரத்தில் அதிகளவு தண்ணீர் குடித்தீர்கள் என்றால் உடலில் அதிகளவு நீர் சேர்ந்துவிடும்.இதனால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதிகமான தண்ணீர் குடிப்பதால் சிலருக்கு வாந்தி,தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.அதிகளவு தண்ணீர் குடிப்பதால் இதய துடிப்பில் மாற்றம்,இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.அதிக தண்ணீர் அருந்துவதால் சிறுநீரகத்தில் நீர் சேர்த்து சுமையாகிறது.இது சிறுநீரக செயலிழப்பை உண்டாக்கிவிடும்.