எய்ட்ஸ் நோயானது HIV என்னும் வைரஸ் மூலமாக பரவுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. நோயினை குணப்படுத்துவதற்கான செயல்முறைகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்னும்ம அதற்கான மருந்துகள் கண்டறியப்படவில்லை.
இதன் பிளஸ் என்னவென்றால் காற்றின் மூலமே,அல்லது தொடுதலின் மூலமாகவோ இந்நோய் பரவுவதில்லை. ரத்தத்தின் மூலம் இந்த நோய் பரவுகிறது எப்படி எனில் பாதுகாப்பற்ற உடலுறவு, சிரஞ்சிகள் மற்றும் சலூன் கடைகளில் மாற்றாமல் பயன்படுத்தப்படும் பிளேடுகள் இப்படி பலவற்றை கூறலாம்.
இந்நோயினை பற்றிய போதுமான அளவு விழிப்புணர்வு பல வருடங்களுக்கு முன்பு இல்லாத நிலையில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது.பிறகு இந்நோய் பற்றிய விழிப்புணர்வுகள் பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.இருப்பினும் பொருளாதார பின்னடைவு உள்ள நாடுகளில் இந்நோய் குறித்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை அதனால் அப்பகுதிகளில் நோய் வேகமாக பரவுகிறது.
இந்நிலையில் குரங்குகளின் மூலமாக எச்ஐவி பரவுகிறது என்றும் தகவல் பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் அதிலும் குறிப்பிட்ட ஒரு குரங்கு இனத்தை சுட்டிக்காட்டுகிறார்கள் அது என்னவென்றால் சிம்பன்சி இனம்.
சிம்பன்சி குரங்கு வகைகளில் பல கொடிய தாக்கத்தினை ஏற்படுத்தும் வைரஸ்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனிடையே 1920 காங்கோவின் கேமரூன் காட்டில் வேட்டைக்காரர் ஒருவரை இக்குரங்கு தாக்கியுள்ளது. குரங்கு மற்றும் வேட்டைக்காரர் இருவரும் காயமடைந்துள்ளனர் அந்தவகையில் குரங்கின் உடம்பிலிருந்த ரத்தம் அந்த வேட்டைக்காரரின் உடலில் பரவி இந்நோய் பரவி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கூற்றினை மறுத்த அமெரிக்கா தனது ஆராய்ச்சியின் அறிக்கைப்படி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ஜோடிகளின் மூலமாகத்தான் இந்த நோய் பரவுவதாக கூறுகிறது, 1981ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலில் ஐந்து இளைஞர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் தகவலை வெளியாகியுள்ளன.