இந்த மூஞ்சிலாம் வியாபாரம் ஆகாது.. சமந்தாவை உதறிய பிரபல இயக்குநர்!

0
158
#image_title

இந்த மூஞ்சிலாம் வியாபாரம் ஆகாது.. சமந்தாவை உதறிய பிரபல இயக்குநர்!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஏ மாயா சேஸாவே’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பிறகு ஏ மாயா சேஸாவே தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.இதில் நந்தினி என்ற சிறிய ரோலில் நடித்து தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து வெளியான ‘பாணா காத்தாடி’ என்ற படத்தில் அதர்வா அவர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் கதாநாயகியாக தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.

இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் சமந்தாவின் ஆரம்ப கால திரைப்பயணம் அவருக்கு மிகவும் கடினமாக இருந்துள்ளது.பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் சமந்தாவை நடிக்க வைக்க தயக்கம் காட்டினார்கள்.இதனால் பல திரைப்படங்களில் கதைக்கு ஏற்ப நடிக்க சமந்தா தயாராக இருந்தும் அவரை முதலில் கமிட் செய்து பிறகு விரட்டிய இயக்குநர்கள் அதிகம் இருக்கின்றனர்.தமிழில் பிரபல இயக்குநராக உள்ள மணிரத்னம் தான் இயக்க இருந்த படம் ஒன்றில் நடிகை சமந்தாவை கமிட் செய்துள்ளார்.அந்த படத்தின் படப்பிடிப்பில் 3 நாட்கள் வரை நடித்த சமந்தா அவருடைய நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் நான் மணிரத்னம் படத்தில் நடித்து வருகிறேன் என்று பெருமையாக சொல்லியுள்ளார்.

இந்நிலையில் 4 வது நாள் படப்பிடிப்பில் சமந்தா உங்கள் முகம் சரியில்லை.நீங்கள் இந்த படத்தில் இருந்து விலகி விடுங்கள் என்று மணிரத்னம் கூறி இருக்கிறார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத சமந்தா மிகவும் வருத்தப்பட்டு அழுதார்.இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் என்று பத்திரிகையாளர் ஒருவர் தற்பொழுது கூறியுள்ளார்.

Previous articleஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இனிமேல் இதற்கு அனுமதி!! சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு!!
Next articleஉலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!!