உலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!!

0
38
World Cup Dream 11 Team!! These are the first 5 players to choose service!!
World Cup Dream 11 Team!! These are the first 5 players to choose service!!

உலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!!

உலகக் கோப்பை தொடருக்கான கனவு 11  அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் முதல் 5 பெயர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டுள்ளார்.

வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த உலகக்கோப்பை போட்டிக்கான முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத்தில் சந்திக்க இருக்கிறது. அதேபோல் இந்திய அணியும் சென்னையில் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவாக்  உலகக் கோப்பை தொடருக்கான தனது கனவு 11 அணிக்கான வீரர்களை தேர்வு செய்துள்ளார். அதில் முதல் 5  வீரர்களின் பெயர்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில் 3 இந்திய கிரிக்கெட் வீரர்களும், ஒரு ஆஸ்திரேலிய வீரரும், ஒரு நியூஸிலாந்து வீரரும் இடம் பிடித்துள்ளனர்.

அதன்படி சேவாக் தனது கனவு அணியில் தேர்வு செய்த 5 வீரர்கள்,

முதல் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், 2-வது வீரராக நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார்.

அதுபோல 3-வது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான  டேவிட் வார்னரை தேர்வு செய்துள்ளார்.

4-வது இடத்திற்கு நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக கலக்கி வரும் கிளென் பிலிப்ஸை தேர்வு செய்துள்ளார்.

5- வது இடத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா இடம்பெற்றுள்ளார்.

இந்த வீரர்களின் தேர்வு குறித்து வீரேந்திர சேவாக் கூறுகையில்,

நான் தேர்வு செய்த வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். மேலும் ஒரு நாள் போட்டிகளில் கலக்கி வருபவர்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களால் தனி ஒரு வீரராக போட்டிகளை வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.