இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழா இந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் மட்டுமின்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
நவம்பர் 26 ஆம் தேதி அன்று என்ன செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருப்பதாவது :-
நவம்பர் 26-ஆம் தேதி காலை 11 மணியளவில் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவன அலுவலகங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை கட்டாயம் வாசிக்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிப்பதுடன், இது சம்பந்தப்பட்ட பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1930, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஓர் ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.