இன்று நாம் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கள் பலவற்றை ஒதுக்கி வருகின்றோம்.இதில் செள செள அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்களில் ஒன்றாகும்.இதில் கலோரி மிகவும் குறைவாகவே இருக்கிறது.இந்த காய் மற்ற காய்களைவிட தனி ருசியை கொண்டிருக்கிறது.இந்த காயை சாலட்,கிரேவி போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.
செள செள காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-
1)நார்ச்சத்து
2)வைட்டமின் சி
3)வைட்டமின் ஈ
4)மெக்னீன்சியம்
5)பாஸ்பரஸ்
6)துத்தநாகம்
7)வைட்டமின் பி
8)புரதம்
செள செள பயன்கள்:
**இதில் குறைந்த கலோரி இருப்பதால் உடல்எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.
**இரத்த சர்க்கரையை குறைக்க அடிக்கடி செள செள காயில் கூட்டு செய்து சாப்பிடலாம்.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க உதவுகிறது.
**சிறுநீரகத்தில் உப்பு சேராமல் இருக்க செள செள காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
**உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க செள செளவை உணவாக சாப்பிடலாம்.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க செள செள சாப்பிடலாம்.
**சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய செள செள சாப்பிடலாம்.சரும ஆரோக்கியம் மேம்பட செள செள சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சருமத்தை பாதுகாக்கிறது.
**வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் செள செள உட்கொள்ளலாம்.நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாக செள செள சாப்பிடலாம்.
**கர்ப்பிணி பெண்கள் செள செள சாப்பிட்டால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.தைராய்டு பாதிப்பில் இருந்து மீள செள செள சாப்பிடலாம்.
**குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க செள செள சாப்பிடலாம்.உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்க செள செள உதவுகிறது.
**வயிற்றுப் பகுதியில் இருக்கின்ற கொழுப்பை கரைக்க செள செள சாப்பிடலாம்.வாரம் ஒருமுறை செள செள சாப்பிட்டால் மன ஆரோக்கியம் மேம்படும்.