இன்று பலரும் விரும்பி சாப்பிடும் பழமாக செவ்வாழை இருக்கிறது.செவ்வாழையில் அதிகளவு பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
ஆண்கள் செவ்வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.செவ்வாழையில் இருக்கின்ற அயன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை நீங்க செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.சிலருக்கு நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருக்கும்.அவர்கள் செவ்வாழைப்பழம் எடுத்துக் கொண்டால் உரிய பலன் கிடைக்கும்.
செவ்வாழைப்பழ ஸ்மூத்தி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
1)கனிந்த செவ்வாழைப்பழம்
2)தேன்
3)முந்திரி
4)பிஸ்தா
5)ஐஸ்கட்டி
6)ஏலக்காய் பொடி
7)பிஸ்தா
8)தயிர்
9)உலர் திராட்சை
செய்முறை:-
முதலில் ஒரு கனிந்த செவ்வாழைப்பழம் எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் 10 முந்திரி,10 பிஸ்தா பருப்பு மற்றும் 5 உலர் திராட்சை சேர்த்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து நறுக்கிய செவ்வாழைத்துண்டுகள் மற்றும் ஊறவைத்த பிஸ்தா,உலர் திராட்சை,பிஸ்தா மற்றும் தேன் சேர்த்து ஒரு சுத்து விடவும்.
பிறகு இரண்டு தேக்கரண்டி தயிர்,சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் மற்றும் சிறிது ஐஸ்கட்டி சேர்த்து மைய்ய அரைத்தெடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு டம்ளரில் மாற்றி பருகவும்.
இந்த செவ்வாழைப்பழ ஸ்மூத்தியை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு குடித்து வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.