இந்த ஒரு பழம் போதும்!! உடலுக்கு கிடைக்கும் இத்தனை ஆரோக்கிய நன்மைகளை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

இந்த ஒரு பழம் போதும்!! உடலுக்கு கிடைக்கும் இத்தனை ஆரோக்கிய நன்மைகளை மிஸ் பண்ணிடாதீங்க!!

Divya

சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை சிட்ரஸ் பழங்களில் ஒன்றான சாத்துக்குடியை தான் அதிகம் சாப்பிட சொல்கின்றனர்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இந்த பழம் பெரிதும் உதவுகிறது.

எலுமிச்சை,ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற பழங்கள் அனைத்தும் சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்தவையாகும்.இதில் ஆரஞ்சு பழம் அனைவரின் பேவரைட்டாக இருக்கிறது.இதில் இருக்கின்ற வைட்டமின் சி சத்துக்கள் உடல் செல்களை பாதுகாக்கிறது.

இந்த ஆரஞ்சு பழம் உடலில் கொலஜனை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.சருமம் சம்மந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது.

ஆரஞ்சு பழ ஊட்டச்சத்துக்கள்:-

**பொட்டாசியம் **நார்ச்சத்து **வைட்டமின் சி **போலேட்

ஆரஞ்சு பழ நன்மைகள்:-

1)உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது.ஆரஞ்சு பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது.

2)உடல் உஷ்ணத்தை குறைக்க ஆரஞ்சு பழச் சாறு பெரிதும் உதவுகிறது.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

3)செரிமானப் பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.ஆரஞ்சு பழத் தோலை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

4)ஆரஞ்சு பழத் தோலை பொடித்து பல் துலக்கி வந்தால் பல் வலியை குறையும்.இதய நோய்,பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்க உதவுகிறது.

5)புற்றுநோய் அபாயத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.ஆரஞ்சு பழச் சாறு உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது.தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரஞ்சு பழச்சாறு பருகலாம்.