பிரியாணிக்கு மணம் சேர்க்கும் இந்த ஒரு பொருள்.. சிறுநீரக கல்லை கரைத்தெடுக்கும்!!

Photo of author

By Divya

பிரியாணிக்கு மணம் சேர்க்கும் இந்த ஒரு பொருள்.. சிறுநீரக கல்லை கரைத்தெடுக்கும்!!

Divya

இன்று பலரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பாக சிறுநீரக கல் உள்ளது.எந்த வயதினருக்கும் இந்த கல்லடைப்பு பாதிப்பு ஏற்படலாம்.சிறுநீரகத்தில் கற்கள் வர முக்கிய காரணம் தண்ணீர் பருகாமை மற்றும் சிறுநீர் கழிக்காமையே.

சிறுநீரகத்தில் படியும் கற்களை கரைத்து வெளியேற்ற இந்த கை வைத்திய முறையை செய்து பயனடையலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பிரியாணி இலை – ஒன்று
2)ஏலக்காய் – ஒன்று
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும்.இவை இரண்டும் தரமான பொருளாக இருக்க வேண்டும்.

பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் ஒரு கிளாஸிற்கு வடித்துக் கொள்ள வேண்டும்.இந்த பானத்தை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
2)வெண் பூசணி துண்டுகள் – கால் கப்
3)அருகம்புல் – சிறிதளவு
4)மாதுளை – கால் கப்

செய்முறை விளக்கம்:-

முதலாவதாக ஒரு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கீற்று வெண் பூசணிகையை தோல் நீக்கவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அருகம் புல் தேவையான அளவு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் மாதுளம் பழத்தை நறுக்கி அதன் விதைகளை சேகரித்து கொள்ள வேண்டும்.

பிறகு மிக்சர் ஜாரில் இந்த பெரிய நெல்லிக்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து வெண் பூசணி துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அருகம் புல் மற்றும் மாதுளம் பழத்தை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை வடிகட்டி பருகினால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.