பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் ஒரே இலை! அது என்ன இலை?

Photo of author

By Kowsalya

மாதுளை பழத்தை சாப்பிட்டு இருப்பீர்கள்! அதில் எத்தனை மருத்துவ பயன்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதுளை இலைகள் மருத்துவ பயன்கள் என்னென்ன இருக்கின்றது என்பதை பற்றி தெரியுமா? இதோ உங்களுக்காக தான் இந்த பதிவு!

1. உங்களுக்கு காது வலி இருந்தால் மாதுளை இலைகளை கடுகுடன் சேர்த்து அரைத்து அதன் சாற்றை காதில் விட காது வலி மாயமாய் பறந்து போகும்.

2. வயிற்று சம்பந்தமான நோய்களுக்கு மாதுளை இலைகள் மிகவும் பயன்படுகின்றன. வாய்வுக்கோளாறு, ஜீரணக்கோளாறு மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு கூட மருந்தாக மாதுளை இலை பயன்படுகிறது. வயிற்றுப்போக்கு நிற்க மாதுளை இலை சாற்றை குடிக்கலாம்.

3. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றம் இல்லாமல் பாதுகாக்கின்றது. மாதுளை இலையால் செய்யப்பட்ட ஜூஸை குடித்து வரலாம்.

4. முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். பருக்கள் போக மாதுளை இலையை அரைத்து தினமும் தேய்த்து வர கொஞ்சம் கொஞ்சமாக பருக்கள் மறைய ஆரம்பிக்கும். சரும வீக்கம், சரும நோய் ஆகியவற்றுக்கும் பயன்படுகிறது.

5. மாதுளை இலையின் டீ தயாரித்து குடிப்பதன் மூலம் சளி, இருமல் பிரச்சனை நீங்கிவிடும். மாதுளை இலைகளை நன்கு கழுவி எடுத்துக்கொண்டு கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறியபின் வடிகட்டி தினமும் இரண்டு முறை குடிப்பதன் மூலம் தொடர் இருமல், தொடர் சளி, நிரந்தரமாக குணம் ஆகும்.

6. தூக்கமே வராமல் அவதிப்படுபவர்கள் மாதுளை இலைகளை அரைத்து 3 கிராம் அளவிற்கு எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு கொதித்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இரவு சாப்பிட்ட பிறகு குடித்து வந்தால் தூக்கம் நல்லபடியாக வரும்.

7. மாதுளை இலைகளை மையாக அரைத்து கண் மீது தடவினால் கண் நோய் குணமாகும்.

இவ்வாறு பல நன்மைகளை உள்ளடக்கியது மாதுளை இலை. அதனால் உங்களுக்கு தேவைப்படும் பொழுது இந்த இலையை பயன்படுத்தி கொள்ளுங்கள்.