மூலம் முதல் ஆண்மை குறைபாடு வரை அனைத்தையும் நிவர்த்தி செய்ய இந்த ஒரு இலை போதும்!!
துத்தி மூலிகை என்று அழைக்கப்படும் துத்திச் செடி இனிப்பு சுவை கொண்டது. இதில் பொதுவாகவே குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ளது.
துத்தி இலை அழற்சியை போக்கும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும். அது மட்டுமில்லாமல் எந்த நோயாக இருந்தாலும் அதை போக்கி உடலை பலப்படுத்தும். இதில் குளிர்ச்சித் தன்மை உள்ளதால் உடல் சூட்டை தணிக்கும். சிறுநீலை பெருக்கும் குணம் கொண்டது.
துத்திப் பூ இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். காமத்தை பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும். இருமலை குணப்படுத்தும்.
துத்தி விதை இனிப்பு சுவை உடையது. இது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், ஆசனவாய் கடுப்பு, கரும்புள்ளி போன்றவற்றை குணப்படுத்தும்.
துத்தி இலைகள் கிடைக்கும் இடங்கள்…
துத்திச் செடி களைச் செடியாக வளரும். இது கடற்கரை ஓரங்கள், சமவெளிப் பகுதிகளில் அதிகமாக கிடைக்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் களைச் செடியாக இது வளர்கின்றது.
துத்திச் செடி குறுஞ்செடி வகையை சேர்ந்தது. இந்த செடி 2 செ மீ வரை உயரம் கொண்டது. இதயவடிவ இலைகளையும் பொன்னிற மஞ்சள் பூக்களையும் இந்த துத்திச் செடி கொண்டிருக்கும். இந்த துத்திச் செடி முழுவதும் மென்மையான ரோமங்கள் இருக்கிறது. இதை தொட்டால் நமக்கு அரிப்பு தன்மை ஏற்படும்.
துத்திச் செடியின் வகைகள்…
மருத்துவ குணம் கொண்ட இந்த துத்திச் செடிகள் பல வகைகளாக இருக்கின்றது. பெருந்துத்தி, பசும்துத்தி, பணியாரத்துத்தி, நிலத்துத்தி, கருந்துத்தி போன்று பல வகைகள் உள்ளது.
துத்திச் செடியின் மருத்துவ பலன்கள்…
மூலத்தை குணமாக்க…
* முலத்தை குணமாக்க துத்தி இலைகளை விளக்கெண்ணெயில் இட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு உள்ள இடங்களில் வைத்து கட்ட வேண்டும்.
* அல்லது இந்த இலைகளை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஓற்றடம் கொடுக்கலாம்.
* துத்தி இலைகளுடன் பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிடலாம். துத்தி இலைச் சாறுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து புண்கள் மேல் பூசினால் புண்கள் குணமாகும்.
* துத்தி இலை சாறை எடுத்து பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகள் மீது வைத்து கட்டினால் கட்டிகள் உடையும்.
வெள்ளைபடுதல் குணமாக…
* வெள்ளைப்படுதல் குணமாக்க துத்தி இலைகளை நெய்யில் சேர்த்து வதக்கி சமையல் செய்து சாப்பிட்டு வரவேண்டும்.
* அல்லது துத்தி இலைகளை காரம் சேர்க்காமல் பொரியல் செய்து சாதத்துடன் சமைத்து சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து 80 முதல் 120 நாட்கள் வரை செய்து வந்தால் வெள்ளைப் படுதல் குணமாகும். இந்த 120 நாட்களிலும் புளி, காரம் சேர்த்த உணவுகள் மாமிசம் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்கவும் கூடாது.
* துத்தி பூ சாறு 20 மிலி அளவு எடுத்து அதில் சிறிதளவு கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இரத்த வாந்தி கட்டுப்படும்.
உடல் சூட்டை குறைக்கும் துத்திச் செடி…
* துத்திப் பூக்களை காயவைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் இரவு குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
* துத்தி விதை சூரணம் ஒரு தேக்கரண்டி எடுத்து, கற்கண்டு ஒரு தேக்கரண்டி எடுத்து, தேனில் கலந்து சாப்பிட்டால் மேகநோய் குணமாகும்.
* துத்தி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் துணியை நினைத்து ஒற்றடம் கொடுத்தால் வலி குணமாகும்.
முகப்பருக்களை தடுக்கும் துத்திச் செடி…
துத்திச் செடியின் வேரில் இருக்கும் மேல் பட்டையை எடுத்து அரைத்து இதை நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்வும். இந்த எண்ணெயை முகப்பருகள் மீது தடவி வந்தால் முகப்பருக்கள் நீங்கி விடும்.
ஆண்மை குறைவுக்கு நிவாரணம் தரும் துத்திச் செடி…
* ஆண்மை குறைபாடு பிரச்சனை உள்ள ஆண்கள் துத்திப் பூக்களை எடுத்து பாலில் கலந்து மிதமான சூடாக்கி அந்த பாலில் சர்ககரை சேர்த்து குடித்து வந்தால் தாது விருத்தி ஆகி ஆண்மை குறைபாடு பிரச்சனை சரியாகும்.
* துத்திப் பூக்களை காம்பு, மொக்குகளோடு சேர்த்து பறித்துக் கொண்டு கஷாயமாக்கி கருப்பட்டி சேர்த்து குடிக்கும் பொழுது ஆண்மை பெருகும்.
தோல் வியாதிகளை நீக்கும் துத்துச் செடி…
படர்தாமரை, கருமேகம் போன்ற தோல் நோய் உள்ளவர்கள் துத்தி விதைகளை பொடியாக்கி அதில் 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அந்த விதைகளை காய்ச்சிய 120 மிலி அளவுள்ள பாலில் கலந்து குடித்து வந்தால் படர்தாமரை, கருமேகம் போன்ற தோல் நோய்கள் குணமடையும்.
வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் துத்திச் செடி…
ஒரு சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுப் போக்கு உண்டாகும். அப்படி உள்ளவய்கள் துத்திச் செடியின் இலைகளை எடுத்து இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவு சாறு இருக்கிறதோ அதே அளவு நெய்யை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு சரியாகும்.
சிறுநீர் பிரச்சனையை சரி செய்யும் துத்திச் செடி…
ஒரு சிலருக்கு சிறுநீர் சரியாக வெளியேறாமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். சிறுநீர் சரியான முறையில் வெளியேற துத்தி இலையை இரசம் செய்து சாப்பிட்டு வயவேண்டும். இந்த துத்தி இலை இரசம் சிறுநீர் சரியான முறையில் வெளியேற உதவி செய்வதோடு மட்டுமில்லாமல் சிறுநீரகம் தொடர்பான நோய்களையும் குணப்படுத்தும்.
மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கும் துத்திச் செடி…
மலச்சிக்கல் பிரச்சனை உள்ள நபர்கள் துத்திக் கீரைகளை எடுத்து நன்கு சுத்தமாக கழுவிவிட்டு அந்த கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.