சர்க்கரை நோய்க்கு அருமருந்து இந்த ஒரு இலை!! பொடி செய்து சாப்பிட்டால் மாத்திரையே இனி தேவையில்லை!!

Photo of author

By Divya

முன்பெல்லாம் சர்க்கரை நோய் பணக்கார்களுக்கு மட்டும் வரும் வியாதி என்பார்கள்.ஆனால் இன்று அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது.உலகம் முழுவதும் சர்க்கரை நோயால் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.குறிப்பாக இந்தியாவில் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த சர்க்கரை நோய்க்கு புது புது மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இயற்கையான பொருட்கள் மூலம் இதற்கு நிரந்தர தீர்வு காண்பதே சிறந்தது.

சர்க்கரை நோயை மருந்து மாத்திரை இன்றி இயற்கையாக குணமாக்க இன்சுலினை பயன்படுத்தலாம்.இன்சுலினில் இரும்புச்சத்து,புரோடீன்,ஆஸ்கார்பிக் அமிலம்,பீட்டா கரோட்டின்,பிளவனாய்டுகள் போன்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

அது மட்டுமின்றி கால்சியம்,பொட்டாசியம்,மாங்கனீஸ்,காப்பர்,குரோமியம்,ஜிங்க் உள்ளிட்ட தாதுக்கள் அடங்கியிருக்கிறது.இரத்தத்தில் இருக்கின்ற அதிகப்படியான சர்க்கரை அளவை குறைப்பதோடு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது

உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்துவதோடு சிறுநீர் தொற்றுக்களை குணமாக்க உதவுகிறது.கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுக்கள் மற்றும் கொழுப்புகளை நீக்க உதவுகிறது.

இன்சுலின் இலை பயன்படுத்துவது எப்படி?

ஒரு கைப்பிடி அளவு இன்சுலின் இலையை நிழலில் நன்கு உலர்த்தி கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த இன்சுலின் இலை பொடி ஒரு தேக்கரண்டி அளவு கலந்து குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுவதோடு உடல் ஆரோக்கியம் மேம்படும்.