எப்படிப்பட்ட தீராத மன அழுத்தத்தையும் இந்த ஒரு எண்ணெய் சரி செய்யும்!! இதை ஒரு முறை மட்டும் தடவுங்கள்!! 

Photo of author

By Rupa

எப்படிப்பட்ட தீராத மன அழுத்தத்தையும் இந்த ஒரு எண்ணெய் சரி செய்யும்!! இதை ஒரு முறை மட்டும் தடவுங்கள்!!

தற்பொழுதைய வாழ்க்கை முறை மற்றும் வேலைப்பளுவானது பலரையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இதனால் தங்களை கூட கவனிக்க நேரமின்றி மக்கள் தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். வேலைப்பளு மட்டுமின்றி  குடும்ப சூழலும் சிலருக்கு மன அழுத்தத்தை உருவாக்கும். இந்த மன அழுத்தத்தால் தூக்கமின்மை எனத் தொடங்கி உணவு செரிமானம் வரை அனைத்தும் உபாதைகளையும் சந்திக்க நேரிடும். இதிலிருந்து விடுபட ஒருமுறை இந்த எண்ணெயை செய்து வைத்துக் கொண்டால் போதும். அவ்வபோது தடவி வர மன அழுத்தம் முதல் ரத்த அழுத்தம் வரை அனைத்தும் குறையும்.

தேவையான பொருட்கள்:
கீழாநெல்லி 100 கிராம்
கடுக்காய் தோல் 100 கிராம்
வேப்பம் பிசின் 100 கிராம்

செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பசும்பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வானலில் 500 ml நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
அதில் நாம் அரைத்து வைத்துள்ள இந்த கலவையை சேர்த்து சூடு படுத்த வேண்டும்.
நன்றாக சூடேறியதும் அடுப்பை அணைத்துவிட்டு இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த எண்ணையை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யலாம்.
இவ்வாறு செய்து வர ரத்த அழுத்தம் முதல் மன அழுத்தம் வரை அனைத்தும் குணமாகும்.