இயற்கையின் அறிய படைப்புகளில் செம்பருத்தி பூ தங்க புஷ்பம் என்று அழைக்க படுகிறது.
எத்தனை வண்ணங்களில் பூத்து குலுங்கும் இதன் மருத்துவ பயன்களை பார்ப்போமா!
1. வயிற்று புண், வாய்ப்புண் நீங்க:
வயிற்று புண்ணால் பாதிக்க பட்டவர்கள் தினமும் காலையில் 5 அல்லது 10 செம்பருத்தி பூவை மென்று உண்டு வர வயிற்று புண் குணமாகும்.
2. பெண்களுக்கு:
கருப்பை பிரச்சினையால் கருவுறாமல் உள்ள பெண்களுக்கும், வயதாகியும் ருதுவாகமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்தி பூ சிறந்த மருந்து.
10 செம்பருத்தி இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் குடித்து வர வெகுவிரைவில் கருப்பை நோய் குணமாகும். ருது ஆகாத பெண்கள் விரைவில் குணமாகும்.
3. இருதயநோய் தீர:
இருதய நோயாளிகள் செம்பருத்தி பூ இதழ், வெள்ளை தாமரையின் இதழ் இரண்டையும் எடுத்து கஷாயம் காய்ச்சி பாலில் கலந்து குடித்து வர இதயத்தில் உள்ள அடைப்புகள் நீங்கும்.
4. மாத விலக்கு பிரச்சினை:
செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் காய்ச்சி அருந்தி வர மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கும். வெள்ளைப்படுதல் குணமாகும்.
5. தலைமுடி நீண்டு வளர:
செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து, வெந்தயம், கறி வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தேங்காய் எண்ணெய் உடன் கொதிக்க வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர தலை முடி உதிர்தல் நீங்கி முடி நன்கு வளரும்.
செம்பருத்தி பூவை காய வைத்து பொடி செய்து காலையில் டீ காபி போல் குடித்து வர உடல் பளபப்பாகும்.நீர் சுருக்கு நீங்க செம்பருத்தி கஷாயம் போதும்.
எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டது இயற்கை தங்க புஸ்பம்.