இந்த ஒரு காய் போதும்! சுகர் உங்க பக்கத்தில் வராது!

Photo of author

By Amutha

இந்த ஒரு காய் போதும்! சுகர் உங்க பக்கத்தில் வராது!

 

நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி இன்று வீட்டில் ஒருவருக்காவது கட்டாயம் வருகிறது. இதனால் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நரம்பு மண்டலம் பாதிப்படையும். சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள், திடீரென ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகுதல், போன்ற பிரச்சனைகளுக்கு இதை செய்து சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். சர்க்கரை நோய் தாக்காதவர்களுக்கு சர்க்கரை இனி பக்கத்தில் கூட வராது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் இதை எவ்வாறு தயார் செய்வது அதற்கான பக்குவம் என்ன போன்றவற்றை காண்போம்.

1. முதலில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது மஞ்சள் பூசணி. அதன் தோலை நீக்கிவிட்டு உள்ளங்கையில் வைத்து பிடித்தால் ஒரு பிடி அளவு இருக்க வேண்டும்.
2. அடுத்து தேவையானவை மிளகு சீரகம் ,வெந்தயம், தலா ஒரு டீஸ்பூன், இவைகள் சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்க உதவும்.

முதலில் எடுத்த பூசணிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் மிளகு ,சீரகம் ,வெந்தயம் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு பேஸ்ட் பதத்தில் அரைக்கவும்.
அரைத்த விழுதை ஒரு பவுலில் மாற்றி வைக்கவும். இந்த விழுதை வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பச்சை மிளகாய் இரண்டு கீறி போட்டு, தேவையான உப்பு சேர்த்து அரைத்த விழுதையும் போட்டு வதக்கியும் சாப்பிடலாம். சாப்பிட நன்றாக இருக்கும்.

பவுலில் உள்ள விழுதில் மிக்சியில் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரையும் சேர்த்து ஊற்றி ஒரு பேஸ்ட் போல கலக்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்ததும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் சாப்பிடலாம்.
இதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி கட்டுக்குள் வரும். மேலும் இன்சுலின் எடுப்பவர்களுக்கு அதன் அளவினை குறைக்க உதவும். இதற்கு இந்த இந்த கலவை நல்லதொரு தீர்வாக அமையும். சர்க்கரை வியாதி வராதவர்களுக்கு சர்க்கரை வியாதி பக்கத்தில் கூட அண்டாது.