இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்!

Photo of author

By Divya

இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்!

கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தூப தீபம் போட்டால் வீடே கோயிலாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)வெட்டிவேர் – 1/2 கப்
2)வெண் கடுகு – 1/4 கப்
3)ஏலக்காய் – 3 தேக்கரண்டி
4)கிராம்பு – 2 தேக்கரண்டி
5)பச்சை கற்பூரம் – 3
6)விரலி மஞ்சள் கிழங்கு தூள் – 3 தேக்கரண்டி
7)ஜவ்வாது – 2 தேக்கரண்டி
8)சந்தனம் – 2 தேக்கரண்டி
9)உலர்ந்த மலர்கள் – 1/2 கப்

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் உலர்ந்த மலர்களை தவிர்த்து இதர பொருட்களை சொல்லப்பட்டுள்ள அளவு படி பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும் வாங்கி கொள்ளவும்.

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு தெய்வத்திற்கு உகந்த மலர்களை நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து இதர பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் உலர்ந்த மலர்கள் மற்றும் வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளவும்.

சாம்பிராணி தூபம் போடும் பொழுது இந்த பூஜை பொடி சிறிது சேர்த்து வீடு முழுக்க தூபம் போடலாம். விளக்கில் பூஜை பொடி சேர்த்து தீபம் ஏற்றினால் வீடே நறுமணம் வீசும். இந்த நறுமணத்தால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.