பெண்களை விட ஆண்கள் தான் அந்தரங்க பாதிப்புகளை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.விதைப்பை வீக்கம்,சிறுநீரக கல்,ஆண்குறி சுருங்குதல்,நீர்த்த விந்த,தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாமல் போதல் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆண்கள் நீர்முள்ளி விதையை மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த நீர்முள்ளி விதையை நம் முன்னோர்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.
நீர்முள்ளி விதையில் கசாயம் செய்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆண்கள் தங்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க இந்த நீர்முள்ளி விதையை அரைத்து நீரில் கலந்து குடித்து வரலாம்.
தேவையான பொருட்கள்:-
1)நீர்முள்ளி விதை – 100 கிராம்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1.நாட்டு மருந்து கடையில் 100 கிராம் அளவிற்கு நீர்முள்ளி விதை வாங்கிக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பின்னர் மிக்சர் ஜாரில் இந்த நீர்முள்ளி விதையை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
3.அதன் பிறகு ஒரு ஈரமில்லாத டப்பாவில் இணைத்த பொடியை கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
4.அதன் பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.
5.பின்னர் அரைத்து வைத்துள்ள நீர்முள்ளி விதைப்பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
6.பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.
7.நீர்முள்ளி பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் தாம்பத்திய வாழ்க்கை சிறக்கும்.கிட்னியில் உள்ள கற்கள் கரைய நீர்முள்ளி விதை பானத்தை பருகலாம்.
8.ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்க நீர்முள்ளி பானம் பருகலாம்.நீர்முள்ளி விதையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் ஆண்களின் உடல்நலக் கோளாறு முழுமையாக குணமாகும்.
9.விதைப்பை வீக்கத்தை சந்திக்கும் ஆண்கள் இந்த பானத்தை தொடர்ந்து மூன்று தினங்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.