வறட்டு இருமல் மற்றும் சளி ஒரே நாளில் குணமாக இந்த ஒரு ஸ்பூன் போதும்!!
தற்பொழுது பருவநிலை மாற்றத்தால் பலருக்கும் காய்ச்சல் சளி இருமல் போன்றவை ஏற்படுகிறது. அத்தோடு கொரோனாவின் வளர்ச்சி ஆன இன்புளுயன்சா வைரஸ் என்பது இச்சூழலில் அதிகரித்து வருகிறது. சுட்டரிக்கும் அளவிற்கு வெயில் வந்துவிட்டாலும் சளி இருமல் காய்ச்சல் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதனை எல்லாம் நாம் கட்டுப்படுத்தலாம். இந்த பதிவில் வருவதை முறையாக பின்பற்றினால் ஒரே நாளில் இருமல் மற்றும் சளி பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இதனை நாம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மஞ்சள்
மஞ்சளில் அதிக அளவு ஆன்டிபயாட்டிக் உள்ளது. சிறிதளவு மஞ்சள் எடுத்து நாக்கின் அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது அந்த மஞ்சளானது உமிழ் நீருடன் கலந்து விடுகிறது. வரட்டு இருமல் உள்ளவர்கள் இதனை பின்பற்றி வர உடனடி தீர்வு காணலாம். இதனை பெரியவர்கள் மட்டும் பின்பற்றினால் போதும்.
மஞ்சள் இவ்வாறு எடுத்துக் கொள்வதால் உடலில் சூடு அதிகரிக்க கூடும் எனவே தண்ணீர் அளவை இதனுடன் அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.
இதுவே சிறிதளவு மஞ்சளுடன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வர பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இருமல் பிரச்சனை குணமாக்க உதவும்.
குறிப்பு:2
இஞ்சி
சிறிதளவு இஞ்சி எடுத்து அதனை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் உள்ள சாற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் இஞ்சி சாற்றுக்கு ஒரு ஸ்பூன் தேன் என்ற அளவில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு இருமல் வரும் பொழுது இதிலிருந்து சிறிது சிறிதாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அரை ஸ்பூன் மட்டுமே கொடுக்க வேண்டும்.
இந்த இஞ்சி தேன் சாற்றுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து பெரியவர்களும் சாப்பிடலாம். இவ்வாறு செய்து வர சளி மற்றும் இருமல் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.