முழங்கால் வலி முதல் வெரிகோஸ் வெயின் வரை அனைத்தையும் குணமாக்க இந்த ஒரு டீ போதும்!!
தற்பொழுது எல்லாம் 30 முதல் 35 வயதை கடந்து விட்டாலே முழங்கால் வலி மூட்டு வலி என்று ஆரம்பித்து விடுகிறது அத்தோடு பலருக்கும் நரம்பு தளர்ச்சி சியாட்டிக் பிரச்சனை ஏற்படுவதோடு ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு கலந்து செல்வதால் சிறு வயதிலேயே மாரடைப்பு வந்து உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
இதனையெல்லாம் தடுக்க உணவு பழக்கவழக்கத்தை மாற்றுவதோடு உடல் நிலையை சீராக வைத்துக் கொள்ள தினந்தோறும் இந்த பதில் வரும் குறிப்பை பின்பற்றினால் போதும். நரம்புத் தளர்ச்சி பிரச்சனை முதல் தைராய்டு சர்க்கரை நோய் வரை அனைத்தும் இந்த ஒரே பானத்தில் நிவர்த்தியடையும்.
தேவையான பொருட்கள்:
தனியா 1 ஸ்பூன்
சோம்பு 1ஸ்பூன்
கற்கண்டு
வீட்டில் இருக்கும் தனியா நரம்பு அடைப்பை நீக்க உதவும். சியாட்டிக் சம்பந்தமான வலியை தீர்க்கவும் உதவும்.
செய்முறை:
எடுத்து வைத்துள்ள தனியா மற்றும் சோம்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு பொன் நிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் வறுத்து வைத்துள்ள சோம்பு மற்றும் தனியாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மூன்று முதல் ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றினால் அது அரை கிளாஸ் தண்ணீராக சுண்டும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்பு இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை டிக்கு பதிலாக எடுத்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு குறைவதோடு நரம்பு அடைப்புகள் அனைத்தும் நீங்கும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இந்த பானத்தில் சிறிதளவு கற்கண்டை சேர்த்து கொள்ளலாம்.