தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் உடல் நலப் பிரச்சனை பிபி அதாவது இரத்த அழுத்தம்.
பிபி ஏற்பட காரணம்:-
**இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை
**முறையற்ற இரத்த ஓட்டம்
**உடல் எடை அதிகரிப்பு
**இரத்த குழாய் அடைப்பு பிரச்சனை
**சர்க்கரை நோய்
பிபி அறிகுறிகள்:-
**அதீத தலைவலி
**மயக்க உணர்வு
**நெஞ்சு வலி
**மூச்சுத் திணறல்
**கண் பார்வை குறைபாடு
**இதயத் துடிப்பில் மாற்றம்
இந்த பிரச்சனை இருப்பவர்கள் உப்பை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அனைவரும் சொல்கிறார்கள்.உண்மையில் உப்பை குறைத்துக் கொள்வதால் தான் உயர் இரத்த அளவு குறைகிறதா என்றால் இதை முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது.
காரணம் நாம் உண்ணும் உணவின் சுவைக்கும் நம் உடல் உணர்விற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.உணவில் குறைவான அளவு உப்பு சேர்த்து சாப்பிட்டாலும் நாம் எந்த மன நிலையில் இருக்கின்றோம் என்பதை பொறுத்து அந்த சுவையே மாற வாய்ப்பிருக்கிறது.நாம் கோபத்தில் இருக்கும் பொழுது உப்பு சுவை குறைந்த உணவை எடுத்துக் கொண்டாலும் இந்த கோபம் எனும் உணர்வால் உடலில் சோடியம் அளவு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.இதனால் உயர் இரத்த அளவு உயர வாய்ப்பிருக்கிறது.எனவே நாம் அறுசுவைகளை சரியாக உட்கொண்டாலும் நம் உடல் உணர்வை பொறுத்து தான் அதன் தன்மை இருக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக உணவில் உப்பு சுவையை முழுவதும் தவிர்க்க முடியாது தவிர்க்கவும் கூடாது.காரணம் நம் உடலுக்கு புளிப்பு,கசப்பு,இனிப்பு,கார்ப்பு,துவர்ப்பு,உவர்ப்பு என்று ஆறு சுவைகளும் முக்கியமாவை ஆகும்.இந்த சுவையில் ஒன்று குறைந்தாலும் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.
உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் உப்பு தவிர்க்க வேண்டுமென்று சொல்வார்கள்.ஆனால் உடலில் உப்பு இல்லையென்றால் நமக்கு பசி என்பது ஏற்படாது.அதேபோல் உடலில் உப்பு சுவை குறைந்தால் நம்மால் பேச முடியாது.இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் கல் உப்பு சிறிதளவு எடுத்து நாவில் வைக்க வேண்டும்.இதை செய்தால் உடனடியாக பசி எடுக்கும்.உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.உடலில் உப்பு சுவை குறைவாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது உப்பு கலந்து பருகலாம்.எனவே உயர் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் உப்பை கட்டுப்படுத்துவது போன்று நம் உணர்வையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.