காவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Photo of author

By Parthipan K

காவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

தமிழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.அதில் தமிழக காவல்துறையில் காவலர்களின் மன உறுதியை அதிகப்படுத்தவும், அவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களுடைய வாரிசுகளுக்கு காவலர் பணியில் 10 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக காவல்துறையில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஒருவருடைய மகன் சதீஷ் என்பவர் தனக்கு காவல்துறையில் உள்ள இட ஒதுக்கீடு முறையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை தனி நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து சதீஷ் அந்த மனுவிற்கு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு சதீஷின் கோரிக்கையை நிராகரித்ததோடு தமிழக காவல்துறையில் காவலர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவீதம்  இந்த ஒதுக்கீடு சட்டவிரோதமானது என கூறி ரத்து செய்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் பொது சேவையில் நுழையும் வாய்ப்பு என்பது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 100 பேர் மேல் முறையீட்டு  மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனு  நீண்ட நாள் நிலுவையில் இருந்த நிலையில் மனுவை உடனடியாக விசாரிக்க கடந்த மாதம் மனுதாரர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி உத்தரவுப்படி இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் முன் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினார்கள். வழக்கு விசாரணையின் போது தமிழக காவல்துறையில் வாரிசுகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவால் பலர் பாதிப்படைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக காவல்துறையை ஊக்கப்படுத்தும் விதமாகதான் இந்த இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. உயர்நீதிமன்றம் அந்த  கருத்தில்கொள்ளவில்லை இட ஒதுக்கீட்டை எதிர்த்து கோரிக்கை வைக்கப்படாத நிலையில் உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து ரத்து செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது என வாதித்தனர்.

அவர்களின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழக காவல்துறை காவலாளர்களின் வாரிசுகளுக்கு காவலர் பணியில்  10% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டனர். மனுதாரர்கள் உரிய வயதை கடந்திருந்தாலும் இவர்கள் அனைவரும் காவல் தகுதிக்கு தேர்வில் கலந்து கொள்ளாலாம் அதற்கு எந்த தடையும் இல்லை  தெரிவித்திருந்தனர்.