8 விதமான நோய்களை நீக்கும் அற்புதமான மூலிகை!

Photo of author

By Kowsalya

இப்பொழுது நாம் பார்க்க இருக்கும் மருந்தானது 8 வியாதிகளை விரட்ட கூடிய மூலிகை . அது மருதம்பட்டை பொடி தான் அது. இதில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது. அதனால் பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக செயல்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

வாங்கி பொடி செய்து கொள்ளலாம்.

 

எந்தெந்த நோய்களை தீர்க்கும் என்பதை பார்ப்போம்!

1. தொண்டை கமறல்:

வாய்ப்புண் மற்றும் தொண்டை கரகரப்பு உள்ளவர்கள் மருதம்பட்டையை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி பின் அந்த நீரை வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது வாயில் ஊற்றி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் மற்றும் தொண்டை கரகரப்பு குணமாகும்.

2. வாதம் குறைய:

100 கிராம் மருதம்பட்டையை எடுத்து அரை லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 30 நிமிடம் கொதிக்க வைத்து பின் ஆற வைத்து எடுத்து கொள்ளவும். இந்த எண்ணெயை எங்கு வாதம் உள்ளதோ அங்கு தடவி மசாஜ் செய்ய நிவாரணம் கிடைக்கும். முகவாதம், பக்கவாதம்,கால் வீக்கம் ஆகியவை நீங்கும். மூட்டு வலி இடுப்பு வலி ஆகியவற்றிற்கு கூட பயன்படுத்தலாம்.

3. வெரிகோஸ் வெயின்:

மருதம் பட்டை பொடியை எடுத்து அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு டீ தயாரித்து, அதை வெரிகோஸ் வெயின் பாதிப்பு எங்கு உள்ளதோ அங்கு கால்களில் மீது ஊற்றி நன்கு ஊற விட்டு, நரம்புகளை நன்கு பிடித்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் வெரிகோஸ் வெயின் பாதிப்பு குறையும்.

4. காயத்திற்கு:

காயம்பட்ட இடத்தில் முதலில் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு பின்னர் மருதம்பட்டை பொடியை வைத்து கட்டு போட விரைவில் இரத்தம் நிற்கும். மேலும் காயம் விரைவில் ஆறும்.

5. பல் ஈறு பாதிப்பிற்கு:

பல் ஈறு, பல்லில் இரத்தம் கசிதல், பல் சொத்தை ஆகியவற்றுக்கு மருதம் பட்டை பொடியை கொண்டு பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான பிரச்சினை தீரும். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

6. பேதி நிற்க:

ஒரு டம்ளர் மோரில் 5 கிராம் அளவு மருதம் பட்டை பொடியை கலந்து குடித்தால் வயிற்று போக்கு தொந்தரவும்,செரிமான பிரச்சினைகளும் அகலும்.

7. கொழுப்பு கட்டிகள் கரைய:

இரண்டு ஸ்பூன் அளவு மருதம் பட்டை பொடியை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் பொடியை போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் சுண்டும் வரை காய்ச்சி காலை மாலை இரண்டு வேளை குடித்து வர கொழுப்பு கட்டிகள், தைராய்டு கட்டிகள்,இரத்த குழாய் அடைப்பு ஆகியவை சரியாகும்.

8. ஆஸ்துமா சரியாக:

ஆஸ்துமா சரியாக நன்கு உலர்ந்த மருதம்பட்டையை அரைத்து மாவாக எடுத்து கொள்ளவும். அதனை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர சளி, இருமல், ஆஸ்துமா தொந்தரவுகள் என அனைத்தும் குறையும்.