ஆண்,பெண் தங்கள் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்க நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அஸ்வகந்தா மற்றும் அதிமதுரப் பொடியை பாலில் கலந்து குடிங்க.
தேவையான பொருட்கள்:-
1)அஸ்வகந்தா பொடி – ஒரு தேக்கரண்டி
2)பூனைக்காலி பொடி ஒரு தேக்கரண்டி
3)பசும் பால் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அஸ்வகந்தா மற்றும் அதிமதுரம் ஆகிய இரண்டு பொடிகளும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வையுங்கள்.பச்சை வாடை நீங்கும் கொதித்து வந்த பின்னர் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி,ஒரு தேக்கரண்டி பூனைக்காலி பொடியை போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
பிறகு இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பருகினால் பாலியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)பால் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஓரிதழ் தாமரை பொடி போட்டு கொதிக்க வையுங்கள்.
பால் நன்றாக கொதித்து வந்த பிறகு இதனை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு பாலில் ஒரு தேக்கரண்டி தேன் மிக்ஸ் செய்து பருகுங்கள்.இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் பால் – ஒரு கப்
2)பிஸ்தா பருப்பு – ஐந்து
3)முந்திரி பருப்பு – ஐந்து
செய்முறை விளக்கம்:-
பிஸ்தா மற்றும் முந்திரி பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த தேங்காய் பாலை கிளாஸிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அரைத்த தேங்காய் மற்றும் முந்திரி பேஸ்டை அதில் போட்டு கலந்து பருகுங்கள்.இப்படி செய்தால் ஆண்மை அதிகரிக்கும்.பாலியல் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும்.