அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கட்டணம் உயர்வு!! பத்திர பதிவுத்துறை அதிரடி விளக்கம்!!

0
99
This rate hike in apartments!! Deed Registration Department action explanation!!
This rate hike in apartments!! Deed Registration Department action explanation!!

அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கட்டணம் உயர்வு!! பத்திர பதிவுத்துறை அதிரடி விளக்கம்!!

அடுக்குமாடி குடியிருப்பின் ஆவண பதிவு கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக வந்த தகவலுக்கு பத்திர பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தற்போது நகர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏதுவானதாக அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனங்கள் அதற்கு தேவையான அடி நிலத்தை விற்பனைக்கு வாங்கி அதன் பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு முறையாக திட்டமிட்டு பிறகு குடியிருப்புகளை வாங்க முன் வருபவர்களிடம் எப்போதும் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொள்வது நடைமுறையில் உள்ளது.

இந்த நடைமுறையானது கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த நிலையில் தற்போது அதே நடைமுறைதான் வலியுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படாமல் உள்ள நிலையில், குடியிருப்புகளை வாங்குபவர்கள் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொண்டு ஏற்கனவே உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும், ஆனால் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஆவணங்களை பொறுத்தவரையில் அவைகள் கட்டுமான கிரைய ஆவணமாகவே அதன் தன்மையை பாவித்து பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து சார்பதிவாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறைதான் தற்போதும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் இதில் சொந்த வீடு வாங்குவதற்கு பதிவு கட்டணம் உயர்வு என பரப்பப்படும் தகவல்கள் உண்மை இல்லை எனவும் பத்திர பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Previous articleவீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!
Next articleஹேப்பி நியூஸ் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! காரணம் இது தான்!!