இந்த காலம் பனிக்காலம். காலையில் பயங்கரமாக பனி பொழிவு நடந்து வருகிறது. இந்த சமயம் சிறு குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சொல்லி சளி தொந்தரவு அதிகமாக இருக்கும். பொதுவாக சளி என்றால் மூக்கில் நீர் வடிதலும் இருக்கும், அதே போல் நுரையீரலிலும் சளி தேங்கி கிடக்கும். நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியின் மூலம் நம்மால் மூச்சு விடும் சிரமம் ஏற்படும்.
அதனால் நுரையீரலில் தங்கி கிடக்கும் சளியை இந்த பானத்தின் மூலம் சரி செய்து விடலாம். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துளசி ஒரு கைப்பிடி அளவு
தூதுவளை ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை ஒன்று
சுக்கு சிறிதளவு
கொத்தமல்லி விதைகள் சிறிதளவு
திப்பிலி அரை தேக்கரண்டி
செய்முறை:
1. முதலில் 250 மில்லி அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
2. மேற்கூறிய அனைத்து பொருட்களும் துளசி ஒரு கைப்பிடி அளவு, தூதுவளை ஒரு கைப்பிடி அளவு, வெற்றிலை ஒன்று, சுக்கு சிறிதளவு
கொத்தமல்லி விதைகள், சிறிதளவு
திப்பிலி அரை தேக்கரண்டி அனைத்தையும் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். 200 மில்லி வரும் வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்.
இப்பொழுது இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பெரியவர்களுக்கு நூறு மில்லி அளவு கொடுக்கலாம்.
சிறியவர்களுக்கு 50 மில்லி வரை கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு 10 மில்லி அளவு கொடுக்கலாம்.
இப்படி சாப்பிட நுரையீரல் தேங்கி கிடக்கும் சளி அனைத்தும் மலம் வ
ழியாக வெளியே வந்து விடும்.