“ஜெயிலர்” திரைபடத்தில் இந்த காட்சிக்கு அனுமதி இல்லை!! ரசிகர்களிடையே பரபரப்பு!!

Photo of author

By CineDesk

“ஜெயிலர்” திரைபடத்தில் இந்த காட்சிக்கு அனுமதி இல்லை!! ரசிகர்களிடையே பரபரப்பு!!

CineDesk

This scene is not allowed in the movie "Jailer"!! Excitement among fans!!

“ஜெயிலர்” திரைபடத்தில் இந்த காட்சிக்கு அனுமதி இல்லை!! ரசிகர்களிடையே பரபரப்பு!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகின்ற ஆகஸ்ட் பத்தாம் தேதி அன்று வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் விநாயகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் களமிறங்கி உள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவை மற்றும் ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்புதான் வெளிவந்தது. எனவே, இப்படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாகி உள்ளது.

வருகின்ற பத்தாம் தேதி வெளிவரும் இப்படத்திற்கு காலை காட்சிகள் பார்க்க அனுமதி இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே, முதல் காட்சி திரையரங்குகளில் காலை ஒன்பது மணிக்கு தான் திரையிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

திரைத்துறையில் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே முதல் காட்சி அதிகாலையிலேயே வெளிவிடப்படும். ஆனால் இனி எந்த படத்தையும் அதிகாலையில் திரையிட கூடாது என்று புதிய உத்தரவு வந்துள்ளது.

இதற்கு காரணம், கடந்த ஜனவரி மாதத்தில் தளபதி விஜய்யின் வாரிசு மற்றும் தல அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒன்றாக வெளிவந்தது.

இதில் இரு நடிகரின் ரசிகர்களிடையே சண்டை ஏற்பட்டது என்பது குறிபிடத்தக்கது. மேலும், அஜித்தின் துணிவு படம் வெளிவந்த கொண்டாட்டத்தின் போது, லாரியில் இருந்து கீழே விழுந்த அஜித் ரசிகர் உயிரிழந்த சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இதனால், இனி அதிகாலை காட்சிகள் கிடையாது என்று ரத்து செய்யப்பட்டு முதல் காட்சியை காலை ஒன்பது மணிக்கு திரையிட முடிவு செய்துள்ளனர். இந்த உத்தரவின் பேரில் கடந்த ஏழு மாதங்களாக எந்த ஒரு திரைப்படமும் அதிகாலையில் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.