சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் இந்த சேவை இலவசம்!! தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!! 

0
124
This service is free in Supreme Court from today!! Announcement issued by the Chief Justice!!
This service is free in Supreme Court from today!! Announcement issued by the Chief Justice!!

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் இந்த சேவை இலவசம்!! தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!! 

சுப்ரீம் கோர்ட்டில் இலவசமாக சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தலைமை நீதிபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டுக்கு இதுவரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையின் போது சிறப்பு அமர்வுகளில் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதில் 700க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இந்த விடுமுறை காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கே.எம். ஜோசப், நீதிபதி அஜய் ரஷ்தொகி , மற்றும் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன், ஆகியோர் முறையே கடந்த மாதம் 16,17 மற்றும் 29தெ ஆகிய தேதிகளில்  ஓய்வு பெற்றனர். இதன் காரணமாக நீதிபதிகள் எண்ணிக்கை சுப்ரீம் கோர்ட்டில் 31 ஆக குறைந்துள்ளது.

மேலும் விடுமுறைக்கு பின் இன்று சுப்ரீம் கோர்ட்டு முதல் முறையாக இயங்க உள்ளது. எனவே பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. அதிலும் முக்கியமாக நாடு முழுவதிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிபதி சந்திர சூட் தலைமையில் அமர்வு விசாரணைக்கு எடுக்கிறது. அதேபோல ஆண்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவான தேசிய ஆணையம் அமைத்தல் தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தேர்தல் பத்திர திட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை, போன்ற வழக்குகளும் வருகின்ற  நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரபரப்பை கிளப்பி வரும் தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கில் தீர்ப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் இலவச வைஃபை சேவை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் சுப்ரீம் கோர்ட்டின் முதல் ஐந்து ஆறு நீதிமன்ற  அறைகள் வைபை வசதி கொண்டதாக மாறிவிட்டது. மேலும் அனைத்து நீதிமன்ற அறைகளிலும் சட்ட புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இப்போது புத்தகங்கள் போய்விட்டன. புத்தகங்களை நம்பி இருக்க மாட்டோம் என்று இல்லை. நீதிமன்ற அறைகளும் வைபை வசதியுடன் இப்போது உள்ளன. இனி அனைத்து நீதிமன்ற அறைகளும் இதேபோல தான் இருக்கும். புத்தகங்கள் மற்றும் காகிதங்கள் இல்லை. அதேபோல புத்தகங்கள் மற்றும் காகிதங்களை நாங்கள் நம்பவே மாட்டோம் என்றும் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

இந்த இலவச சேவையை கோர்ட்டுக்கு வரும் வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், மனுதாரர்கள், ஆகியோர் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தகவல் ஆனது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Previous article2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது வாபஸ்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு!!
Next articleமாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!! உடனடியாக சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!!